ETV Bharat / sitara

பாரதியாரின் பாடல் வரியை பட தலைப்பாக மாற்றிய சிம்பு

author img

By

Published : Aug 6, 2021, 12:51 PM IST

நடிகர் சிம்புவின் 47ஆவது படத்தின் புது தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிம்பு
சிம்பு

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சிம்பு - கெளதம் மேனன் புதிய படத்தில் இணைகின்றனர். ஐசரி கணேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என முதலில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் கூடிய படத்தின் புதிய டைட்டில் இன்று வெளியாகும் என படக்குவினர் அறிவித்தனர். அறிவித்தபடி சிம்புவின் 47ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மூன்றாவது முறையாக சிம்பு - கெளதம் மேனன் இணைந்துள்ள இப்படத்திற்கு, 'வெந்து தணிந்தது காடு' என பாரதியாரின் பாடல் வரிகள் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அப்போஸ்டரில் பற்றியெரியும் காடு நடுவே சிம்பு மிகவும் ஸ்லிம்மாக, நெருப்பில் இருந்து எழுந்துவந்ததுபோல் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பையொட்டி ட்விட்டரில் #SilambarasanTR47, #STR47 ஆகிய ஹேஷ் டாக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: ’நவரசாவால் 11 ஆயிரம் குடும்பம் பயன்’ - கார்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.