ஹைதராபாத்: நடிகர் சித்தார்த் நடித்துள்ள மகா சமுத்திரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் டிரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது.
இதில் சித்தார்த் கலந்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக இயக்குநர் அஜய்பூபதியிடம் கேள்வி எழுப்பியபோது, சித்தார்த் ஒரு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் சித்தார்த்துக்கு என்ன ஆச்சி...