ETV Bharat / sitara

ஹிரோவாகும் காமெடியன்களுக்கு ’ஆல் தி பெஸ்ட்’ சொன்ன சதீஷ்!

கதாநாயகனாக நடிக்கும் சக காமெடி நடிகர்களுக்கு, நடிகர் சதிஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sathish
author img

By

Published : Aug 30, 2019, 10:26 PM IST

புதுமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’சிக்சர்’ படத்தின் நாயகனாக நடிகர் வைபவ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ளார்.

மேலும், இவர்களுடன் நடிகர்கள் சதீஷ், ராதாரவி, இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை பற்றி தனது அனுபவத்தை நடிகர் சதிஷ் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.சதிஷின் நேர்காணல் பின்வருமாறு:

'சிக்சர்' படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன?

இந்த படத்தில் கதாநாயகனின் நண்பனாக நான் நடித்துள்ளேன். மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது என்ற பிரச்னையில் உள்ள கதாபாத்திரத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கும், அவருக்கு துணையாக இருக்கும் நண்பருக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பது போன்ற ஒரு நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்.

மாலைக்கண் நோய் உள்ள ஒரு கதாபாத்திரத்துடன் இணைந்து நடிக்கும் போது என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்?

எனக்கு நடிப்பதற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை. உண்மையிலேயே, மாலைக்கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு தருணமாக இதை நான் கருதினேன். நான் கடவுளிடம் வேண்டிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான், இது போன்று எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் மனிதர்களைப் படைக்க வேண்டும்.

ஒரு கதாநாயகனுக்கு காமெடியன் எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்தவராக உள்ளார்?

கதாநாயகனுடைய காதலை சொல்வதாகட்டும், பல இடங்களில் கதாநாயகனுக்குப் பதில் அடிவாங்குவதாகட்டும், அனைத்தும் ஒரு காமெடியன் தான் செய்கிறார். ஒருவருக்கு நண்பர் எவ்வளவு முக்கியமோ அது போன்றுதான் ஒரு கதாநாயகனுக்கு காமெடியன் மிகவும் முக்கியமானவர். காமெடி போன்ற ஒரு கதாபாத்திரம் படத்தில் இருந்தால் படம் ஜாலியாக செல்லும்.

'சிக்சர்' சதீஷின் கலகல நேர்காணல்

நீங்கள் எப்பொழுது கதாநாயகனாக நடிக்க உள்ளீர்கள்?

கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்றால் சந்தானம் போன்று சரியான முயற்சியோடு நடிக்கவேண்டும். அவர் ஏதோ கதாநாயகன் போன்று நடிக்கிறார் என்று சொல்லமுடியாது. அதற்காகவே தனது உடலை பிட்டாக மாற்றிக்கொண்டார். நடனம் கற்றுக்கொண்டார். சண்டை பயிற்சி கற்றுக் கொண்டார். இதனால், அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபோன்று கற்றுக்கொண்டால் கதாநாயகனாக நடிக்கலாம்தான், ஆனால், அது இப்போதைக்கு வாய்ப்பில்லை.

கதாநாயகனாக நடிக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்ததா?

வாய்ப்புகள் வந்தது. அதற்காக நான் ஒரு பெரிய ஆளாக சீன் போடுவதில்லை. என்னை வைத்து கதாநாயகனாக படம் எடுக்க வேண்டும், என்று என்னைத் தேடி வரும் இயக்குநரிடம் நான் ஒன்றே ஒன்றுதான் கூறுவேன். உங்களுடைய வாழ்க்கையும் இந்த படத்தில் அடங்கியுள்ளது. அதனால் உங்களுடைய முதல் படம் ஒரு நல்ல கதாநாயகனை வைத்து படம் எடுங்கள். அந்த படத்தில் எனக்கு காமெடியாக கதாபாத்திரம் இருந்தால் கொடுங்கள், என்றுதான் இயக்குநரிடம் கூறி அனுப்புகிறேன்.

சந்தானம், சூரி, யோகிபாபு இவர்கள் கதாநாயகராக நடித்து வருகின்றனர் இவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

அவர்கள் அனைவருக்கும் 'ஆல் தி பெஸ்ட்' (all the best), எங்கிருந்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அடுத்து உங்களுடைய ப்ராஜெக்ட் என்ன?

எழில் சார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தில் நான் நடித்துள்ளேன். ஆயிரம் ஜென்மங்கள் படம் அக்டோபர் மாசம் வெளிவரவிருக்கிறது. ஜெயம் ரவியின் 25ஆவது படம் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. கார்த்தியுடன் ஒரு படம் நடிக்கிறேன். ஸ்டுடியோ கிரீன் புரோடக்சன் தயாரிப்பில் ஆர்யாவுடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

சர்வானந்த் உடன் இணைந்து ஒரு படம் நடித்துவருகிறேன். அது தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இவை தவிர உதயநிதி ஸ்டாலின், சசிகுமார் ஆகியோருடனும் நடித்துவருகிறேன்.

Intro:நடிகர் சதீஷுடன் சிறப்பு பேட்டிBody:சிக்ஸர் படம் குறித்து நடிகர் கவுண்டமணி லீகல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இது குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன?

இதைப் பற்றி பேசுவதற்கு நான் பெரிய ஆள் இல்லை இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் பேசுவார்கள்

சிக்ஸர் படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன?

இந்த படத்தில் கதா நாயகனின் நண்பனாக நான் நடித்துள்ளேன் மாலை ஆறு மணி ஆனால் கண் தெரியாது என்ற பிரச்சினையில் உள்ள கதாபாத்திரத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கும் அவருக்கு துணையாக இருக்கும் நண்பருக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பது போன்ற ஒரு நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்.

ஒரு கதாநாயகனுக்கு காமெடியன் எந்த அளவுக்கு முக்கிய வாய்ந்தவராக உள்ளார்?

கதாநாயகனுடைய காதலை சொல்வதாகட்டும் பல இடங்களில் கதாநாயகனுக்கு பதில் அடிவாங்குவது ஆகட்டும் அனைத்தும் ஒரு காமெடியன் தான் செய்கிறார். ஒருவருடைய வாழ்க்கையில் ஒருவருக்கு நண்பர் எவ்வளவு முக்கியமோ அது போன்றுதான் ஒரு கதாநாயகனுக்கு காமெடியன் மிகவும் முக்கியமானவர். காமெடி போன்ற ஒரு கதாபாத்திரம் படத்தில் இருந்தால் படம் ஜாலியாக செல்லும்.

நீங்கள் எப்பொழுது கதாநாயகனாக நடிக்க உள்ளீர்கள்?

கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்றால் சந்தானம் போன்று சரியான முயற்சியோடு நடிக்கவேண்டும். அவர் ஏதோ கதாநாயகன் போன்று நடிக்கிறார் என்று சொல்லமுடியாது. அதற்காகவே தனது உடலை பிட்டாக மாற்றிக்கொண்டார். நடனம் கற்றுக்கொண்டார். சண்டை பயிற்சி கற்றுக் கொண்டார். ஒரு ப்ராப்பர் கதாநாயகன் போன்று இருந்தார். இதனால் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபோன்று கற்றுக்கொண்டால் கதாநாயகனாக நடிக்கலாம் அது இப்போதைக்கு இல்லை.

கதாநாயகனாக நடிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்ததா?

வாய்ப்புகள் வந்தது அதனால் நான் ஒரு பெரிய ஆளாக சீன் போடுவதில்லை. என்னை வைத்து கதாநாயகனாக படம் எடுக்க வேண்டும் என்று என்னை தேடி வரும் இயக்குனரிடம் நான் கூறுவது என்னவென்றால் உங்களுடைய வாழ்க்கையும் இந்த படத்தில் அடங்கியுள்ளது. அதனால் உங்களுடைய முதல் படம் ஒரு நல்ல கதாநாயகனை வைத்து படம் எடுங்கள் அந்த படத்தில் எனக்கு காமெடியும் கதாபாத்திரம் இருந்தால் கொடுங்கள் என்றுதான் இயக்குனரிடம் கூறி அனுப்புகிறேன்.

சந்தானம் சூரி யோகிபாபு இவர்கள் கதாநாயகராக நடித்து வருகின்றனர் இவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது

அவர்கள் அனைவருக்கும் ஆல் த பெஸ்ட் எங்கிருந்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

அடுத்து உங்களுடைய ப்ராஜெக்ட் என்ன?

எழில் சார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தில் நான் நடித்துள்ளேன். ஆயிரம் ஜென்மங்கள் படம் அக்டோபர் மாசம் ரிலீஸ் ஆகிறது. ஜெயம்ரவியின் 25-வது படம் தற்பொழுது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. கார்த்தியுடன் ஒரு படம் நடிக்கிறேன். ஸ்டுடியோ கிரீன் புரோடக்சன் தயாரிப்பில் ஆர்யாவுடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். சர்வானந்த் உடன் இணைந்து ஒரு படம் நடித்து வருகிறேன் அது தெலுங்கு தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இவை தவிர உதயநிதி ஸ்டாலின் சசிகுமாருடன் நடித்து வருகிறேன்.

Conclusion:மாலைக்கண் நோய் உள்ள ஒரு கதாபாத்திரத்துடன் இணைந்து நடிக்கும் போது என்ன பிரச்சனைகள் எதிர் கொண்டீர்கள்?

பிரச்சினைகள் எதுவும் இல்லை. உண்மையிலேயே மாலைக்கண்நோய் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு தருணமாக இதை நான் எடுத்துக் கொண்டேன். நான் கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான் இது போன்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மனிதர்களைப் படைக்க வேண்டுமென்று.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.