ETV Bharat / sitara

மணிரத்னம் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - இயக்குநர் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் ரியாஸ் கான் இணைந்துள்ளார்.

ponniyin-selvan
ponniyin-selvan
author img

By

Published : Dec 17, 2019, 3:00 PM IST

கி.பி. 1000ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன்.

இந்த நாவலை மையமாக வைத்து நீண்ட நெடுங்கால முயற்சிக்குப் பின் இயக்குநர் மணிரத்னம் பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பணிகள் கடந்த வாரம் முதல் தாய்லாந்து நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே தற்போது பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வின்னர், அரசு, ரமணா, சுறா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த இவர் தற்போது மணிரத்னத்தின் வரலாற்றுப் படத்தில் இணைந்துள்ளார்.

riyaz khan
நடிகர் ரியாஸ் கான்

மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படிங்க...

டாப்ஸியின் கிரைம் த்ரில்லர் 'ஹசீன் தில்ருபா' - ஃபஸ்ட் லுக் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.