ETV Bharat / sitara

HBD ரியாஸ் கான் - கட்டதுரைக்கு கட்டம் இப்போ சூப்பரோ சூப்பர்! - ரியாஸ் கான் பிறந்தநாள்

நடிகர் ரியாஸ் கான் இன்று (செப்டம்பர் 9) தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

ரியாஸ் கான்
ரியாஸ் கான்
author img

By

Published : Sep 9, 2021, 7:17 AM IST

Updated : Sep 9, 2021, 7:26 AM IST

பிரபல மலையாள தயாரிப்பாளர் ரஷீத் கானின் மகன் ரியாஸ் கான். இவர் 'சுகம் சுககாரம்' என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, அடுத்தடுத்து ஏகப்பட்ட மலையாள படங்களில் நடித்துவந்தார்.

தொடர்ந்து தமிழில் 1993ஆம் ஆண்டு வெளியான ஆத்மா படத்தில் நவீன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சின்ன மேடம், கள்ளழகர் என அடுத்தடுத்து இவரது படங்கள் வரிசையாக வெளியாகின.

இதனையடுத்து இவர் விஜயகாந்த், விஜய், ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சுந்தர். சி இயக்கத்தில் வெளியான, வின்னர் படத்தில் இவர் ’கட்டதுரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரியாஸ் கான்
ரியாஸ் கான்

படத்தில் நாயகியின் மாமனாக நடித்த இவர், வடிவேலுவை பல இடங்களில் சகட்டுமேனிக்கு கலாய்க்கும் தோரணை பலத்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வடிவேலுவை அடித்து, காலை உடைத்து தலைகீழாகத் தொடங்கவிட்ட நகைச்சுவை காட்சி இன்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று. வடிவேலுவை அவர் வம்பு இழுப்பதும், அதற்கு அவர் எதிர் கவுண்டர் கொடுப்பது எனப் படம் முழுவதும் நகைச்சுவையாக நகரும்.

உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரியாஸ் கான் கஜினி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் காவல் அலுவலராக நடித்துள்ளார். மேலும் இந்தியில் ரீமேக்கான கஜினி படத்திலும் இவரே காவல் அலுவலராக நடித்து அசத்தியிருந்தார்.

ரியாஸ் கான்
ரியாஸ் கான்

ரியாஸ் கான் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் ரியாஸ் கான் இன்று (செப்டம்பர் 9) தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

Last Updated : Sep 9, 2021, 7:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.