ETV Bharat / sitara

சீனா சென்றும் வீணாய்போன ‘2.0’!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘2.0’ திரைப்படம் சீனாவில் எதிர்பார்த்த அளவு வணிகமாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2.0 in china
author img

By

Published : Sep 9, 2019, 4:31 PM IST

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்த இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘2.0’, மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. எனினும் படம் பார்த்து திரும்பிய ரசிகர்களில் பலர், படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே தெரிவித்தனர்.

இந்நிலையில், செப்டம்பர் 6ஆம் தேதி ‘2.0’ திரைப்படம் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 40,000க்கும் அதிகமான 3D திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

2.0 in china
சீனாவில் 2.0

சீனாவில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட ‘2.0’, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முதல் நாள் வசூலான 9 கோடி ரூபாய் உட்பட இதுவரை 14 கோடி ரூபாய் மட்டுமே அப்படம் வசூல் செய்துள்ளது. இது சீனாவில் வசூல் சாதனை புரிந்த முதல் ஐந்து இந்திய படங்களின் லிஸ்டில்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Actor Rajnikanth portrayed 2.0 collection in China

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.