ETV Bharat / sitara

புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக்கிடம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Puneeth Rajkumar
Puneeth Rajkumar
author img

By

Published : Oct 29, 2021, 1:51 PM IST

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் புனித் ராஜ்குமார். இவர் பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று (அக்.29) காலை புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இசிஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களில் ஒருவரான ரங்கநாத் நாயக் கூறுகையில், "புனித் ராஜ்குமார் இன்று (அக்.29) காலை 11.30அளவில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு வரும்போதே அவரது உடல்நிலை மோசமானது. எங்களால் முடிந்தவரை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" என்றார்.

மருத்துவரின் இந்த அறிவிப்பால் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் 'ராஜகுமாரா' புனித் ராஜூடன் இணையும் ப்ரியா ஆனந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.