தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் ப்ரஜின். அதற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்து மீண்டும் சின்ன தம்பி தொடர் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் ப்ரஜின் தற்போது 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குஹாசினி நாயகியாக நடிக்கும் இதில் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா, சிவான்யா ஆகியோர் நடிக்கின்றனர்.
மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என நினைத்த ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சித்திரங்களுக்கும் இடையில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது.
![ப்ரஜின் திரைப்பட பூஜை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/2dc20426-9dde-49f5-8f18-7fa00e6abc7f_0301newsroom_1641216504_693.jpg)
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 3) சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். விரைவில் படத்தின் அடுத்தகட்ட அப்டேட் குறித்த தகவல் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காலங்களில் அவள் வசந்தம் படப்பிடிப்பு தொடக்கம்