ETV Bharat / sitara

ஆந்திர வெள்ளம்: ஒரு கோடி ரூபாய் வழங்கிய பிரபாஸ் - ஆந்திரா வெள்ளம்

ஆந்திர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

பிரபாஸ்
பிரபாஸ்
author img

By

Published : Dec 8, 2021, 9:22 AM IST

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது.

அதிலும் குறிப்பாக திருப்பதி, சித்தூர், நெல்லூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ஆந்திர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக சிரஞ்சீவி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ் பாபு உள்ளிட்டோர் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'உயிரிழந்துவிடுவேன் என நினைத்தேன்' - விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.