ETV Bharat / sitara

’மூத்த கலைஞர்களது குடும்பங்களின் இருள்போக்கிய பூமிகா அறக்கட்டளை’- நாசர் நெகிழ்ச்சி! - சினிமா செய்திகள்

சென்னை: நடிகர் சமூகம் சார்பாக பூமிகா அறக்கட்டளைக்கு நடிகர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.

நாசர்
நாசர்
author img

By

Published : Aug 8, 2021, 1:47 PM IST

நடிகர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உலகமே இருளில் தத்தளிக்கிறது. சோடியம் விளக்கு, எல்இடி விளக்குகளை தேடாமல் சின்னஞ்சிறு தீக்குச்சி உரசல்களுக்காக துழாவிக் கொண்டிருக்கும்போது, அகல் விளக்காய் வந்தது பூமிகா அறக்கட்டளை (Bhoomika trust).

வெளிச்சம் எவ்வளவு தூரம் பாய்கிறது என்பதல்ல. வெளிச்சம் எவ்வாறு தோன்றியது என்பது தான் மகத்துவம். மிக மிக நேர்த்தியாகத் திட்டம் வகுத்து அதை நடைமுறைப்படுத்தி ’பூமிகா டிரஸ்ட்’ முன் உதாரணமாக இருக்கிறது.

பூமிகா அறக்கட்டளைக்கு நடிகர் நாசர் நன்றி!
கலைஞர்களுக்கு உதவும் பூமிகா அறக்கட்டளையினர்

அதன் காரண கர்த்தாக்களாகிய இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் ஜெயேந்திரன் ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்வது என் கடமையாகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 400க்கும் மேற்பட்ட மூத்த நாடக - சினிமா கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, ஐந்து மாதங்களுக்கான பொருள் உதவி செய்திருப்பது பல குடும்பங்களின் இருள்போக்கும் விளக்காகி உள்ளது. கலைஞர்கள் அனைவரும் நேரில் சென்று வாங்கிச் சென்றார்கள்.

மூத்த சினிமா கலைஞர்களுக்கு உதவும் பூமிகா அறக்கட்டளையினர்

உதட்டளவில் இல்லாமல், ஆழ் மனதிலிருந்து உதவி பெற்ற கலைஞர்கள் சார்பாகவும் நடிகர்கள் சமூகம் சார்பாகவும் பூமிகா டிரஸ்டுக்கு நன்றிகளை அர்ப்பணிக்கின்றேன். அவர்களது நோக்கமும் இலக்கும் வெற்றி அடைவதாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’தற்போதைய நல்ல பெயரை பயன்படுத்தி 100% வெற்றிபெற வேண்டும்’ - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.