நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா, ஒமைக்ரான் பரவல் மிக வேகமாகப் பரவிவருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்துவிதமான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பயன்படுத்தியும் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்.
என்னுடன் கடந்த சில நாள்களாகத் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கரோனா விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களில் மட்டும் நடிகைகள் ஸ்வரா பாஸ்கர், ஏக்தா கபூர், மீனா, அருண் விஜய் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏக்தா கபூருக்கு கரோனா பாதிப்பு!!