ETV Bharat / sitara

'ஹவுஸ் ஓனர்' திரைப்படம் எனக்கு ரொம்ப அட்டாச்மென்ட் - நடிகர் கிஷோர் சிறப்புப் பேட்டி - நடிகர் கிஷோர்

சென்னை: இயக்குநர் லட்சுமி ராம கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'ஹவுஸ் ஓனர்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்ட நடிகர் கிஷோர் ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

house owner
author img

By

Published : Jun 26, 2019, 3:01 PM IST

'ஆரோகணம்' , 'அம்மினி' ஆகிய படங்களின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் புதியதாக இயக்கியிருக்கும் படம் 'ஹவுஸ் ஒனர்'.

இப்படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர் , நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஆகியோர் நடித்துள்ளனர் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படது. இதில் கலந்து கொண்ட நடிகர் கிஷோர் ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் கிஷோர்

ஹவுஸ் ஓனர் படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் பற்றி

சென்னையில் நடைபெற்ற வெள்ள பாதிப்பின்போது இருந்த இருவரின் கதைதான் இந்த படம். முதலில் எனக்கு இந்த படத்தின் டைட்டில் மிகவும் பிடித்திருந்தது. ஹவுஸ் ஓனர் என்பது ஒரு பெயராக இல்லாமல், ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்தை கூறும் விதமாக உள்ளது.

நாம் சம்பாதித்து வாங்கிய நிலம் மீது உள்ள அட்டாச்மென்ட் அதுமட்டுமில்லாமல் உணர்வுபூர்வமான ரிலேஷன்ஷிப்பிற்கு உள்ள அட்டாச்மெண்ட்டையும் இந்தக் கதை கூறுகிறது. இதனால் இந்த படம் எனக்கு பிடித்திருந்தது.

இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கும்போது உங்கள் சொந்த வாழ்க்கையின் நினைவுகள் வந்ததா?

கிட்டத்தட்ட எனது அப்பாவும் இதே போன்றுதான் இருப்பார். இதுதான் இந்தக் கதையில் எனது அட்டாச்மென்ட். அந்த காலத்தில் கவர்ன்மென்ட் வேலையில் இருப்பவர்கள், தங்கள் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்து ரிட்டயர்மென்ட் காலத்தில்தான் சின்னதாக வீடு கட்டி. அதில் வாடகையும் விட்டு, வாழ்க்கை நடத்துவார்கள்.

வாழ்க்கை முழுவதும் உழைத்து கட்டிய வீடு என்பதால் அந்த வீட்டின் மீது அட்டாச்மென்ட் இருக்கும். இது எனக்கு மிகவும் தொடர்புடையதாக இருந்தது. இப்போது அதிக மக்களுக்கு மறதி நோய் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. இது நம் வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த நோய் இப்போது அதிகரித்துவருகிறது. அந்த ஞாபக மறதி நோய் குறித்த ஒரு விழிப்புணர்வாகக்கூட இந்த படம் இருக்கலாம். இது எல்லாமே என்னோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடிப்பதற்கு சிறப்பு பயிற்சி பெற்றீர்களா?

இல்லை ஹோம் ஒர்க் எதுவும் நான் செய்யவில்லை. ஏனென்றால் நான் மிகவும் சோம்பேறித்தனம் உள்ளவன். இயக்குநர்தான் அதிகளவில் குறிப்புகள் வைத்திருந்தார். இயக்குநரின் சகோதரி கணவருக்கு இதேபோன்று ஞாபக மறதி பிரச்னை உள்ளது. அவரும் ராணுவத்தில் பணியாற்றியவர்தான். ஒரு ராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிக்கு ஞாபக மறதி நோய் வந்தால் எப்படி இருப்பார் என்பதற்கு அவரின் வீடியோக்கள் எனக்கு இயக்குநர் காட்டினார்.

அவர் எப்படி நடந்துகொள்வார், பிரச்னைகளை எப்படி எதிர் கொள்வார் என சின்ன சின்ன விவரங்களையும் இயக்குநர் எனக்கு கற்றுத் தந்தார்.

இந்த படத்தை உங்கள் குடும்பத்தார் பார்த்தார்களா ? உங்கள் மனைவி என்ன கூறினார்?

இன்னும் அவர்கள் இந்த படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் இந்த படத்தை திரையரங்கில்தான் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த படத்தில் உள்ள உணர்வுப்பூர்வமான விஷயங்கள் புரியும். இந்த சிறப்பு காட்சிக்கு எனது மனைவி என்னுடன் வருகிறேன் என்றுதான் கூறினார். ஆனால் நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். திரையரங்கிற்கு சென்றுதான் படம் பார்ப்போம்.

ஆடியன்ஸ்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்

தமிழ் மக்கள் எப்பொழுதுமே சினிமாவிற்கு நல்ல ஆடியன்ஸாக இருந்திருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் நல்ல படங்கள் வருகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்களுடைய ஆதரவு உள்ளது. இந்தப் படத்தையும் கண்டிப்பாக வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.