ETV Bharat / sitara

மருத்துவமனையில் நடிகர் கார்த்திக்: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை - நடிகர் கார்த்திக்கின் காலில் காயம்

நடிகர் கார்த்திக் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Karthik
Karthik
author img

By

Published : Jul 29, 2021, 12:24 PM IST

'இயக்குநர் இமயம்' பாராதிராஜா இயக்கத்தில் வெளியான 'அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கார்த்திக். அதன் பின் கார்த்திக் பல படங்களில் முன்னணி ஹீரோவாக வலம் வர தொடங்கினார்.

தற்போது கூட கார்த்திக் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது 'தீ இவன்', 'அந்தகன்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில், உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுதது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது காலை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். கார்த்திக் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஸ்கேனில், கார்த்திக் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிப்பட்டதால் எலும்பில் சிறிய விரிசில் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.