ETV Bharat / sitara

உணவில் அபாயம் - கையெழுத்து பரப்புரையைத் தொடங்கிய கார்த்தி

மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றம் செய்வதற்கான கையெழுத்து பரப்புரையை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார்.

கார்த்தி
கார்த்தி
author img

By

Published : Jan 9, 2022, 5:31 PM IST

நாம் தினமும் சாப்பிடும் உணவிலுள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து வருகிறோம். அதேபோல் நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

தற்போது உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது.

இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் நடிகர் கார்த்தி கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது.

இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைபடுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்க பாதிப்புகள், புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடி

உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்ச் சாகுபடியை ஏற்பதில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்தபோதிலும் இப்படியான உணவுப்பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால், இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை.

  • Dear friends, an important online petition that should concern all of us. It is about @fssaiindia altering the regulations on GM & GE Foods which could open floodgates to GM foods coming into our lives. I am signing on. Pls sign, if you agree to this: https://t.co/6hekyMr1xU.

    — Actor Karthi (@Karthi_Offl) January 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மனுவில் கையெழுத்திடுவோம்

இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.
யார், எப்படி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும், எந்தக்குறிப்பும் இல்லை. எனவே, மக்கள் நலனைக் காக்க, இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஐஸ்வர்யா முருகன்' வெளியீட்டுத் தேதி தள்ளிவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.