அகரம் அறக்கட்டளை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நேற்று சென்னை, சோழிங்கநல்லுரில் உள்ள சத்யபாமா கல்லூரியில் 'தடம் விதைகளின் பயணம்' என்ற பெயரில் விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, சிவக்குமார், கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது கார்த்தி பேசுகையில், "நான் இங்கு ஒரு விருந்தினராக வந்துள்ளேன். எப்போதுமே வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதில் தான் மகிழ்ச்சி அதிகம் உள்ளது. ஆகவே நாம் வாங்கிக் கொண்டாலும், கொடுக்கும் நிலையை பின்பற்ற வேண்டும்.
யாரோடும் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் மற்றவர்களை விட மேலானவரும் இல்லை, கீழானவரும் இல்லை. வாழ்க்கையில் என்றுமே தேடல் என்பது தேவை. நாம் எப்போதும் நம் வாழ்வில் புது தேடலை, கண்டு மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
திருமணமான பின்பு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள். சகிப்புத்தன்மை, தேடல், சமநிலை உள்ளிட்ட மூன்றுமே உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னது அடுத்த மாதம் கோலிவுட்டில் இத்தனை படங்கள் வெளியாகிறதா?