நடிகர் கமல்ஹாசன் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
'விக்ரம்' படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் பாசிலை வைத்து 'மாலிக்' படத்தை இயக்கிய மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் கமல் 'தேவர் மகன் 2' படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான கதையைக் கமல் எழுதி வருவதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்ந்த சில விஷயங்களுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார்.
உறுதி செய்த கமல்ஹாசன்
சமீபத்தில் அங்கிருந்து சென்னை திரும்பினார். இதனையடுத்து தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கமல் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.
பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
-
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021
இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." எனப் பதிவிட்டுள்ளார்.
கமலின் இந்த ட்வீட்டை அடுத்து பிரபலங்களும் ரசிகர்களும், அவர் கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
அன்பு நண்பர் கலைஞானி @ikamalhaasan அவர்கள் #COVID19 தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன். https://t.co/OSIT3JH961
— M.K.Stalin (@mkstalin) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அன்பு நண்பர் கலைஞானி @ikamalhaasan அவர்கள் #COVID19 தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன். https://t.co/OSIT3JH961
— M.K.Stalin (@mkstalin) November 22, 2021அன்பு நண்பர் கலைஞானி @ikamalhaasan அவர்கள் #COVID19 தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன். https://t.co/OSIT3JH961
— M.K.Stalin (@mkstalin) November 22, 2021
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கோவிட்-19 தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது - கமல் பாராட்டு