சென்னை: நடிகர் கலையரசன், நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் இன்று (அக்டோபர் 30) சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அருங்காட்சியகம் குறித்து கலையரசன் கூறியதாவது,"காவல் அருங்காட்சியகம் மிக அருமையாக இருக்கிறது. நிம்மதியாக நாம் வீட்டில் வாழ காரணம் போலீஸ். 100 ஆண்டுகளாக காவல்துறையில் பயன்படுத்திய பொருட்கள், பயன்படுத்தும் பொருள்களின் பிரிவுகள், காவல்துறையின் வளர்ச்சி என அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. அனைவரும் குழந்தைகளுடன் வந்து நிச்சயம் காண வேண்டும்" என்றார்.
அவரைத் தொடர்ந்து சாண்டி கூறியதாவது, எனது குடும்பத்தில் அனைவருமே காவல்துறையில் பணிபுரிபவர்கள். காவல்துறையை பற்றி தனக்கு தெரியாத பல விஷயம் அருங்காட்சியகத்தில் உள்ளது. அதைப்பார்த்து நான் மிரண்டு போனேன்.
ஆங்கிலேயர் காலம் முதல் இது நாள் வரை காவல்துறை பயன்படுத்திய ஆயுதங்கள் உள்பட அனைத்து பொருட்களும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதைப்பார்க்கையில் மிக பிரமிப்பாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காவல் அருங்காட்சியத்தில் கமலின் 'விக்ரம்' படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பு