ETV Bharat / sitara

ஹீரோவான 'கோமாளி' பட இயக்குநர்!

சென்னை: 'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

author img

By

Published : Oct 4, 2021, 1:32 PM IST

c
c

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் 'கோமாளி'. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் யோகி பாபு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கோமாவில் 16 ஆண்டுகளாக இருக்கும் ஜெயம் ரவி, இயல்புநிலைக்குத் திரும்பிய பின் நவீன உலகில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு வியக்கிறார். அத்துடன் தனது பழைய காதலியைத் தேடிச்செல்லும்போது ஏற்படும் சம்பவங்களை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் 'கோமாளி'.

90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையையும் தற்போதைய நவீன உலகில் நாம் தொலைத்த விஷயங்களையும் திரையில் பிரதிபலிக்கும்விதமாக அமைந்திருக்கும் படத்தின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 'கோமாளி' படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை இயக்குவதோடு அல்லாமல் அவரே ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தியை ஏஜிஎஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் 'கோமாளி' படத்தில் இறுதி காட்சியில் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'குக் வித் கோமாளி சீசன் 3' தொடங்குவது எப்போது?...அப்டேட் இதோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.