ETV Bharat / sitara

சிக்சர் படத்துக்கு கவுண்டமணியால் சிக்கல்!

அனுமதி பெறாமல் தன்னுடைய புகைப்படமும், வசனமும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நடிகர் கவுண்டமணி 'சிக்சர்' படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

sixer
author img

By

Published : Aug 29, 2019, 8:54 PM IST

புதுமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக பாலக் லால்வானி என்பவர் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் நடிகர்கள் சதீஷ், ராதாரவி, இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - ஜிப்ரான். ஒளிப்பதிவு - பி.ஜி. முத்தையா.

sixer
நடிகர் கவுண்டமணியின் வக்கீல் நோட்டிஸ்

வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

சிக்சர் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்டார். அதில், மாலைக்கண் நோயால் பதிக்கப்பட்டவராக வரும் வைபவ் செய்யும் கலாட்டாக்கள், காமெடிகள் என காட்சிகள் கலகலபாக இருக்கும் நிலையில், ரஜினி, கமல், அஜித், கவுண்டமணி என ரெஃபரன்ஸ் தந்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.

sixer
நடிகர் கவுண்டமணியின் வக்கீல் நோட்டிஸ்

இந்நிலையில் இப்படத்தில் தன்னுடைய முன் அனுமதி பெறாமல் தான் பேசிய வசனங்களும், தன்னுடைய புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நடிகர் கவுண்டமணி சார்பில் அவருடைய வழக்கறிஞர் சசிகுமார் .
படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சாச்சி, நடிகர் வைபவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், 'தாத்தா டேய் சிறப்பா பண்ணிட்ட டா ராத்திரியெல்லாம் என்ன அக்கிரமம் பண்ணியோ ஆறு மணிக்கு மேல கண்ணு தெரியாம போச்சு டா.'

'ஒரு கோடி ரூபா கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல வேலை பார்க்கமாட்டேனாடா முப்பது ரூபா கொடுத்தா மூணு நாள் கண்ணு முழிச்சி வேல பார்ப்பேன் டா'

sixer
நடிகர் கவுண்டமணியின் வக்கீல் நோட்டிஸ்

போன்ற வசனங்கள் கவுண்டமணியின் முன் அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளதாகவும் அதனை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் இல்லையெனில் சட்ட ரீதியாக சந்திப்போம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:சிக்ஸருக்கு படத்துக்கு சிக்கல்
Body:சிக்சர்' திரைப்படம்
வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்

அறிமுக இயக்குநரான சாச்சி இயக்கியுள்la இந்தப் படம் நாளை வெளியாகவுள்ளது .

இந்நிலையில் இப்படத்தில் தன்னுடைய முன் அனுமதி பெறாமல் தான் பேசிய வசனங்கள் மற்றும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நடிகர் கவுண்டமணி சார்பில் அவருடைய வழக்கறிஞர் சசிகுமார் .
படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சாச்சி நடிகர் வைபவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கவுண்டமணி அவர்களின் அனுமதியில்லாமல் அவர் பேசிய

"தாத்தா டேய் சிறப்பா பண்ணிட டா ராத்திரி யெல்லாம் என்ன அக்கிரமம் பண்ணியோ ஆறு மணிக்கு மேல கண்ணு தெரியாம போச்சு டா"

மற்றும்.

"ஒரு கோடி ரூபா கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல வேலை பார்க்கமாட்டேனடா முப்பது ரூபா கொடுத்தா மூணு நாள் கண்ணு முழிச்சி வேல பாப்பேன் டா" என்ற வசனங்களை கவுண்டமணியின் முன் அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளதாகவும் அதனை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மேலும் அவர்களை தொடர்பு கொண்ட போது பேச இயலவில்லை எனவும் குறுந்தகவல் மூலமாகவும் தெரிவித்துள்ளோம்
என்றும் படத்திலிருந்து சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டுமெனவும் இல்லையெனில் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் Conclusion:வழக்கறிஞர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.