துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'வரனே அவஷ்யமுண்டு'. சமீபத்தில் இணையத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சுரேஷ் கோபி, தான் வளர்க்கும் நாய்க்கு வேறு பெயர் இருந்தும், அதனை பிடித்த பெயர் சொல்லி அழைப்பதற்காக பிரபாகரன் என்று அழைப்பார். அது தமிழர்களையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும் இழிவுப்படுத்துவதாக சர்ச்சை வெடிக்கத் தொடங்கியது. முன்னதாக படத்தில் செய்தியாளர் ஒருவரின் புகைப்படம் வெளியானதால், அதற்கு துல்கர் மன்னிப்புக் கேட்டிருந்தார்.
தற்போது 'பிரபாகரன்' என்னும் பெயர் படத்தில் இடம்பெற்றிருந்ததால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் துல்கர் சல்மான் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடிகர் துல்கர் சல்மான் விளக்கம் கொடுத்து, ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
நாய்க்கு பிரபாகரன் எனப் பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமைப்போரையும் இழிவுபடுத்துவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார், நடிகர் துல்கர் சல்மான்.
அதில்,' 'வரனே அவஷ்யமுண்டு’ திரைப்படத்தில் இருக்கும் பிரபாகரன் காமெடி காட்சி தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதென பலர் என் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அது வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல. அது பழைய மலையாளத் திரைப்படமான பட்டண பிரவேசத்தில் உள்ள காமெடி காட்சியின் ஒரு குறிப்பு. கேரளாவில் அது பிரபலமான மீம் ஆகும்.
இதையும் படிங்க... ஜோதிகாவின் பேச்சை வைத்து சர்ச்சை கிளப்புவது மனசாட்சியற்றது - இயக்குநர் சரவணன்
அது கேரளாவில் பிரபலமான பெயராகும். படத்தின் தொடக்கத்தில் டிஸ்க்லேய்மரில் குறிப்பிட்டது போல், அந்தப் பெயர் எந்த உயிருள்ள அல்லது இறந்த நபரையோ குறிப்பிடவில்லை. இந்த சர்ச்சைக்குப் பலரும் படத்தை பார்க்காமலேயே எதிர் வினையாற்றியும் வெறுப்பையும் பரப்பி வருகின்றனர். என்னிடமோ, எனது இயக்குநர் அனுப் இடமோ வெறுப்பைக் காட்டினால், நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மாறாக எங்கள் தந்தைகளிடமோ படத்தின் மூத்த நடிகர்களிடமோ வெறுப்பைக் காட்டவேண்டாம்.
இந்தச் சம்பவத்தால் புண்படுத்தப்பட்ட கனிவான நல்ல தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். என் படத்தின் மூலமாகவோ... எனது சொற்கள் மூலமாகவோ... யாரையும் நான் புண்படுத்த நினைத்தது இல்லை. இது உண்மையிலேயே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்' என்று பதிவிட்டுள்ளார்.
-
To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! pic.twitter.com/erbjftlNbj
— dulquer salmaan (@dulQuer) April 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! pic.twitter.com/erbjftlNbj
— dulquer salmaan (@dulQuer) April 26, 2020To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! pic.twitter.com/erbjftlNbj
— dulquer salmaan (@dulQuer) April 26, 2020
அதன் பிறகு முன்னதாக குறிப்பிட்ட 'பட்டண பிரவேஷம்' என்னும் படத்தில் இடம்பெற்ற பிரபாகரன் காமெடி காட்சியையும் நடிகர் துல்கர் சல்மான் ட்வீட் செய்திருந்தார்.
-
To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! This is the reference to the joke in question. The 1988 film “Pattana Pravesham”. pic.twitter.com/7fQrrJRU7u
— dulquer salmaan (@dulQuer) April 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! This is the reference to the joke in question. The 1988 film “Pattana Pravesham”. pic.twitter.com/7fQrrJRU7u
— dulquer salmaan (@dulQuer) April 26, 2020To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! This is the reference to the joke in question. The 1988 film “Pattana Pravesham”. pic.twitter.com/7fQrrJRU7u
— dulquer salmaan (@dulQuer) April 26, 2020