பாலிவுட்டில் வெளியான 'ஹை அப்னா தில் தோ அவாரா' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா சௌக்ஸி.
இவர் நீண்ட நாள்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஜூலை12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தான் இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், "நான் சொல்ல நினைப்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. நான் சில மாதங்களாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கம் வரவலில்லை. ஏகப்பட்ட மெசேஜ்கள் உள்ளது.
உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். நான் தற்போது மரணப்படுக்கையில் இருக்கிறேன். யாரும் தயவு செய்து எந்த கேள்வியும் கேட்காதீர்கள். உங்கள் மீது நான் எந்த அளவு அன்பு வைத்து இருக்கிறேன் என்பது கடவுளுக்கு தான் தெரியும். மிஸ் யூ ஆல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
திவ்யாவின் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சம் வேண்டாம்;ஆனால் அலட்சியம் செய்யக்கூடாது’ - விவேக்