துருவங்கள் பதினாறு', 'நரகாசூரன்', 'மாஃபியா' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தனுஷை வைத்து மாறன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
மாளவிகா மோகனன் நாயகியாக இதில் நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் மாறன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் பிப்ரவரி மாதம் நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் ஆதி - ஓடிடியில் அன்பறிவு!