தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சேரன், பாடகி பி. சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் சங்கத்தில் பொங்கல் சிறப்பு மலரை பாடகி பி. சுசிலா, எடிட்டர் மோகன் இணைந்து வெளியிட, சேரனும் தர்ஷனும் பெற்றுக்கொண்டனர்.
இதன்பின் சேரன் பேசுகையில், இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. படைப்புகளை முதலில் கணிப்பது பத்திரிக்கையாளர்கள்தான். இவர்களை பார்க்கும்போது எப்போதும் பயமாகவே இருக்கும். உதவி செய்யும் நோக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
நான் இதுவரை 23 படங்களை கடந்து வந்திருக்கிறேன். பாரதி கண்ணம்மா படத்தை கொண்டாடியது நீங்கள்தான். தற்போது நிறைய சேனல்கள் இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். குறையே சொல்ல முடியாத அளவுக்கு படம் எடுக்க வேண்டும். நிறைய நல்ல படங்கள் காணாமல் போகிறது. நானும் ஒரு யூடியூப் ஆரம்பித்து இந்த சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.