ETV Bharat / sitara

அதர்வாவின் 'குருதி ஆட்டம்' இசை விரைவில்!

அதர்வா நடிப்பில் யுவன் இசை அமைத்துள்ள 'குருதி ஆட்டம்' படத்தின் இசை விரைவில் வெளியாக உள்ளது.

author img

By

Published : Jun 28, 2021, 6:21 PM IST

adharva
adharva

'எட்டு தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். தற்போது இவர் அதர்வா- பிரியா பவானி சங்கரை ஜோடியாக வைத்து 'குருதி ஆட்டம்' என்னும் புதியப்படத்தை இயக்கி வருகிறார்.

ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில், ராதா ரவி, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. கரோனாவின் இரண்டாவது அலைக்கு முன்பே 'குருதி ஆட்டம்' படத்தின் படப்பிடிப்புகள், டப்பிங் உள்ளிட்ட அணைத்து வேலைகளும் முடிவடைந்தது.

தற்போது 'குருதி ஆட்டம்' படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருப்பகுதியாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்களை விரைவில் வெளியட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வெளியானது அதர்வாவின் 'குருதி ஆட்டம்' டீசர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.