ETV Bharat / sitara

பாக்ஸராக நடிக்கும் ஆர்யா: வைரலாகும் ஆர்யாவின் நியூ லுக் வீடியோ - arya movie updates

நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

பாக்ஸராக நடிக்கும் ஆர்யா- வைரலாகும் ஆர்யாவின் நியூ லுக் வீடியோ

author img

By

Published : Feb 20, 2020, 10:05 PM IST

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது படத்திற்காக உடல் எடையை அதிகரிப்பது, குறைப்பது போன்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் புதிதாக நடிகர் ஆர்யா இணைந்துள்ளார்.

ஆம்! இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை அதிகரித்து மிகவும் ஃபிட்டாக வைத்துள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

1970ஆம் ஆண்டு நடந்த குத்துச்சண்டையை அடிப்படையாக, வைத்து உருவாகிவரும் இப்படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் ஆர்யா உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், 'நான் நேசிக்கும் விளையாட்டுச் சார்ந்த படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய கெரியரில் இந்தப் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவின் கடின உழைப்புக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: மந்தையிலிருந்து தப்பித்த ஆடு ஓநாயிடம் மாட்டும் 'கன்னி மாடம்' சொல்லும் பாடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.