ETV Bharat / sitara

நடிகர் ஆர்யா ஏமாற்றியதாக ஜெர்மனி பெண் புகார் அளித்த விவகாரம்: மேனேஜர் அர்மான் முன் ஜாமீன் மனு - திருமணம் செய்வதாக ஜெர்மனி பெண்ணை ஏமாற்றிய ஆர்யா

திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் ஆசை வார்த்தை கூறி 70.40 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாக, நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மன் நாட்டுப் பெண்மணி கொடுத்த புகார் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

cheating case against arya
நடிகர் ஆர்யா மீது மோசடி புகார்
author img

By

Published : Mar 26, 2021, 9:33 AM IST

Updated : Mar 26, 2021, 10:02 AM IST

சென்னை: ஜெர்மனி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய புகாரில் நடிகர் ஆர்யாவின் மேலாளர் முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டின் குடியுரிமை பெற்ற பெண் வித்ஜா. இவர், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி பிரதமர் மோடி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பினார்.

பண மோசடி

"சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஹுசைனி, முகம்மது அர்மான் உதவியுடன் நடிகர் ஆர்யா, அவரது அம்மா ஜமீலா ஆகியோர், என்னிடம் திருமணம் ஆசை காட்டி 70.40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தன்னை என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். அவரது செல்போனில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி பேசினார்.

திருமண ஆசை காட்டி மோசடி

2018ஆம் ஆண்டு ஏப்ரலில் என்னை விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். அவரது வார்த்தையை நம்பி நானும் அவருடன் பேசி வந்தேன். ஆர்யாவின் அம்மா ஜமீலாவும், ஆர்யாவை எனக்கு திருமணம் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார்.

நான் அவர்களிடம் நெருக்கமாகப் பேசி வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஆர்யாவும் அவரது அம்மாவும் வீடியோ காலில் வந்து தங்களது முகத்தைக் காட்டியதுடன், அவர்களது வீட்டையும் வீடியோவில் சுற்றிக் காண்பித்தனர்.

ஒரு கட்டத்தில், தங்களது குடும்பத்தில் உள்ள நிதிப் பிரச்னையை சுட்டிக்காட்டி என்னிடம் பண உதவி கேட்டனர். அவர்களது குடும்பத்தில் நானும் ஒருத்தி, வருங்கால மருமகள் என்றெல்லாம் ஆசைவார்த்தைகள் கூறினர்.

அவர்களின் போலி வாக்குறுதியை நம்பி, அவர்களின் மோசடிக்கு நான் இரையாகிவிட்டேன். நடிகர் ஆர்யாவும் அவரது தாயார் ஜமீலாவும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு டிசம்பர் வரை என்னிடமிருந்து 80 ஆயிரம் யூரோக்கள் வாங்கியுள்ளனர் (இந்திய ரூபாய் மதிப்பில் 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்).

தான் பிரபலமான நடிகர் என்பதால் வெளியே சென்று பொதுவெளியில் பணம் எடுக்க முடியாது என்றும், பணத்தை தனது மேனேஜர் முகமது அர்மானுக்கு அனுப்பி வைக்குமாறு என்னிடம் கூறி வந்தார். இதை நம்பி நானும், ’வெஸ்டர்ன் மணி’ மூலம் அர்மானுக்கு பணம் அனுப்பி வைத்தேன்.

ஆர்யா - சாயீஷா திருமணம்

திடீரென்று, ஆர்யா 2019ஆம் ஆண்டு சாயீஷா என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது தாயார் ஜமீலாவின் ஏற்பாட்டில் ஆர்யா திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன்.

உடனடியாக ஆர்யாவைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது, இந்தத் திருமணத்தில் தனக்கோ, தனது அம்மாவுக்கோ ஆர்வமில்லை. தனது அப்பாவின் விருப்பத்தின் பேரில் சாயீஷாவின் குடும்பத்தினர், தனது கடனை தீர்த்து வைப்பதாக சொன்னதன் பேரில் கல்யாணத்துக்கு தான் ஒப்புக் கொண்டதாக அவர் பதிலளித்தார்.

2019ஆம் ஆண்டு இறுதி வரை என்னிடமிருந்து அவர் பணம் பெற்று வந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆர்யா- ஷாயீஷா திருமணம் பற்றி எனக்குத் தெரியவந்தது. உடனடியாக நான் ஆர்யாவிடம் கேள்வி கேட்டதற்கு, சாயீஷாவின் குடும்பத்தினர் எங்கள் முழு கடனையும் தீர்த்துக் வைப்பதாகக் கூறியுள்ளனர். எனவே அதற்காக மட்டுமே சாயீஷாவுடன் திருமணம் செய்து கொண்டதாக பதிலளித்தார். அதன்பிறகு ஆறு மாதங்களுக்குள் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு, முறைப்படி என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் வாக்களித்தார்.

ஷூட்டிங் போன்ற திருமணம்

இதுபற்றி, ஜமீலாவிடம் கேட்டதற்கு, ”சாயீஷாவுடன் நடைபெற்ற திருமணம் ஒரு ஷூட்டிங் போன்றது. நிச்சயமாக ஆர்யா உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வார்” என்று பதிலளித்தார். நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது ஆர்யாவும் அவரது அம்மாவும் பல காரணங்களை சொல்லி தாமதப்படுத்தி வந்தனர். பணத்தை திருப்பிக் கொடுக்க இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கால அவகாசம் கேட்டு வந்தனர்.

ஒருகட்டத்தில் அவர்கள், என்னைத் தவிர்க்கத் தொடங்கினர். பின்னர் ஆர்யாவும் அவரது தாயாரும் திருமணம் என்ற போர்வையில் பல பெண்களை உடல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளனர் என்பதை நான் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மன வேதனையுற்றேன்.

பணத்தை திருப்பித் தரவில்லை

அதனைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் ஆர்யாவைத் தொடர்பு கொண்டு அவரது அம்மா ஜமீலாவின் மோசடி குறித்து கேள்வி எழுப்பியதோடு, எனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொலைபேசி வாயிலாக என்னை இழிவாகப் பேசியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் என்னை மிரட்டினர்.

ஆனால் இன்னும் அவர்கள் என்னிடம் வாங்கிய பணத்தை ஒரு பைசா கூட திருப்பித் தரவில்லை. மேலும் ஆர்யா, அவரது அம்மா ஜமீலா ஆகியோர் முகமது அர்மான், ஹுசைனி ஆகியோரின் உதவியுடன் என்னை ஏமாற்றியுள்ளனர். ஆகவே, இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" இவ்வாறு அந்தப் புகார் மனுவில் வித்ஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சைபர் கிரைமில் வழக்குப்பதிவு

இந்தப் புகார், தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சென்னை சைபர் கிரைம் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே ஆர்யாவின் உதவியாளர் முகம்மது அர்மான், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது புகார்தாரர் வித்ஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ”அர்மானுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது. ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் நடிகர் ஆர்யாவும் அவரது அம்மா ஜமீலாவும் ஆசை வார்த்தை கூறி பணமோசடி செய்துள்ளனர். அதற்கான ஆதாரம், ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள், வாட்ஸ்-அப் தகவல்கள் என அனைத்தும் உள்ளன” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என சென்னை காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அர்மானின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு நீதிபதி செல்வகுமார் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: மருத்துவப் பணியை தொடங்கிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!

Last Updated : Mar 26, 2021, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.