நடிகர் அருண்விஜய் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்த அவர், அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான புகைப்படத்தை வெளியிட்ட அவர், "தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இதுபோன்ற இருண்ட காலத்தை உலகம் சந்தித்துவரும் நிலையில், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டியது நமது கடமையாகும். தயவுசெய்து பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘பூ உதிர்ந்தது’ - பிரபல பாடகர் கோமகன் மறைவு