சேலம் மாவட்டம் தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருள்களை நடிகர் ஆரி அர்ஜூனா தனது 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை சார்பாக வழங்கினர்.
இது குறித்து அவர் கூறுகையில், " 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை தொடங்கிய நாள் முதல் இன்றுவரை இயற்கை, மொழி, கலை போன்ற சமூக சிந்தனையுடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கஜா புயல், ஒக்கி புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுடன் மக்களாக தோள்கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இந்த கரோனா வைரஸ் காரணமாக உலகிலுள்ள அனைத்து துறையினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டம் தாரமங்கலத்திலுள்ள நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழ தமிழர்களும் 50 நாள்களுக்கு மேலாக எந்த வருமானமும் இன்றி மிகுந்த சிரமப்படுகிறார்கள் என்று தகவல் அறிந்து, அவர்களுக்கு உதவும் பொருட்டு 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை, கனடா வாழ் ஈழத் தமிழர்கள் இணைந்து 410 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கியுள்ளோம். இந்த நிவாரண உதவி தகுந்த இடைவெளியுடன் வழங்கப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க... நெடுஞ்சாலை படப்புகழ் நடிகர் ஆரி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல்...!