பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஆனந்தராஜ் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தனிப்பட்ட முறையில் கட்சியின் சார்பில் என் இல்லத்தில் அவரது திருவுருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
அண்ணாவின் பிறந்தநாளில் உறுதிமொழியாக நீண்ட வருடமாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணாவின் பிறந்த நாளில் இந்த 7 பேர் விடுதலை ஆவதற்கான அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபந்தனையின் பேரிலாவது அந்த 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்.
அப்போ நீங்கள் திமுக வில் இணைய வாய்புள்ளதா என்ற கேள்விக்கு, இதுவரையில் நான் அண்ணா திமுக காரனாகத்தான் இருக்கிறேன் என்று பதிலளித்தார்.
பாஜக மூத்த தலைவர் அமித்ஷா இந்தி திணிப்புக்கான ட்விட்டர் கருத்து குறித்த கேள்விக்கு, தாய்மொழி தமிழை அவமதிக்க ஒருபோதும் விடமாட்டேன், கல்தோன்றி மன்தோன்றா காலத்தில் பிறந்த தமிழை தவிர்த்து, இந்தி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இருமொழி கொள்கைதான் என்றும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். இந்தி வேண்டும் என்றால் தேவைப்படுபவர்கள் கற்று கொள்ளலாம் என்றார்.
நடிகராக இருந்து ஒரு கட்சியின் இளைஞர் அணி தலைவராக பொறுபேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு என் வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.