தல அஜீத் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் கடவுளிடமே கேட்கும் நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் படக்குழு வாய் திறந்தபாடில்லை.
இந்நிலையில் தல அஜித்தின் மகன் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படங்கள், ரசிகர்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது. திருமண விழா ஒன்றிற்கு தனது மகன் ஆத்விக்குடன் ஷாலினி சென்றார்.

அந்த திருமண விழாவின் போது எடுக்கப்பட்ட ஆத்விக்கின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், இதனை அஜித் ரசிகர்கள் #kutti thala என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க...இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்தான் விவசாயத்தை காக்க முடியும்- பத்மஸ்ரீ பாப்பம்மாள்