சென்னை: 'தல' என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித், பைக் ரைடர், துப்பாக்கி சுடுதல் என பன்முகத் தன்மை கொண்டவர். பைக் ரைடிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
சமீபத்தில் தான் நடித்துள்ள வலிமை படத்தை முடித்த கையோடு பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் செய்தார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கையில் தேசிய கொடியுடன், ராணுவ வீரர்களுடன் அஜித் உள்ள புகைப்படம் வெளியானது.
இந்தநிலையில், இன்று குட்டித் தல ஆத்விக்கின் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் நீண்ட தூரம் பைக் பயணத்தை முடித்து கொண்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிகிறது. அந்த புகைப்படத்தில் மகன் ஆத்விக் அஜித்தின் ஹெல்மெட்டை அணிந்தபடி க்யூட் ஸ்மைல் செய்துள்ளார்.
![தல அஜித் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13509885_a2.jpg)
நடிகர் அஜித், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை தனது படங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார். படங்களில் வாகனம் ஓட்டும் காட்சிகளில் அவர், உடன் பயணிப்பவர் ஹெல்மெட் அணிந்தபடி செல்லும் காட்சிகளாகத்தான் அமைந்திருக்கும். அந்த வகையில் குட்டித் தல ஆத்விக்கிற்கு இப்போதே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை கற்றுக் கொடுக்கிறார் போல!
![தல அஜித் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13509885_a1.jpg)
இதையும் படிங்க: ரஜினிகாந்த் உடல்நிலை: நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்!