ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகியுள்ள 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தைப் போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இதனையடுத்து இதே கூட்டணி, மீண்டும் புதிய படத்தில் (AK 61) இணைகிறது. இம்மாத இறுதியில் படப்பிடிப்புத் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு வேடம் வில்லன் எனவும் கூறப்படுகிறது.
இதற்காக அஜித் தாடியுடன் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இப்படத்திற்காக அஜித் உடல் எடையைக் குறைக்கவுள்ளாராம். வலிமை படத்தில் அஜித், உடல் எடை அதிகரித்துக்காணப்பட்டதாக சிலர் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தற்போது புதிய படத்திற்காக 10 கிலோ எடை குறைத்துள்ள அஜித் இன்னும் 25 கிலோ குறைக்க முடிவு செய்துள்ளாராம். இந்தச் செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டைலிஷான லுக்கில் அஜித்... ரசிகர்கள் கொண்டாட்டம்...