ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாள்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபடவுள்ளனர்.
வலிமை படத்தின் போஸ்டர்கள், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்கள், படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
![Ajith](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13400168_ajith-3.jpg)
இந்நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அந்த வகையில், தற்போது அஜித் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
![Ajith](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13400168_ajith.jpg)
![Ajith](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13400168_ajith-1.jpg)
புகைப்படங்களில் அஜித் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் கைக்குலுக்கி, அவர்களை ஊக்கப்படுத்துகிறார். மேலும் வாகா எல்லை கதவு முன்பு கையில் தேசிய கொடியுடன் அஜித் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
![Ajith](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13400168_ajith-2.jpg)
இதையும் படிங்க: அவர எப்படி 'தல'ன்னு சொல்லலாம் - சமூகவலைதளத்தில் சண்டையிடும் 'தல' வெறியர்கள்!