ETV Bharat / sitara

இதோட நிறுத்திக்கோங்க ப்ளூ சட்டை மாறன்... பொங்கி எழுந்த நடிகர் ஆரி... - கள்ளன் திரைப்படம் ரிலீஸ் எப்போது

ப்ளூ சட்டை மாறன் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

கள்ளன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி

author img

By

Published : Mar 14, 2022, 11:41 AM IST

பெண் எழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் கரு. பழனியப்பன் நடிப்பில் மார்ச் 18ஆம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் 'கள்ளன்'. இத்திரைப்படத்தை வி.மதியழகன் தயாரித்துள்ளார். கே இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 13) சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர்கள் ராஜுமுருகன், சீனு ராமசாமி, நடிகர் ஆரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராஜுமுருகன் பேசிய போது, "கள்ளன் படத்தை தயாரிப்பாளர் படத்தை சிறிய படம் என்று சொன்னார். ஆனால் இந்த படம் வெளியான பிறகு பெரிய படமாக மாறும். எனக்கு சினிமா மீது பெரிய கனவு கிடையாது. ஆனால் சந்திராவுக்கு உள்ளது. பெண் இயக்குநர்களை பொது புத்தியில் இருந்து பார்கிறார்கள். பெரியார், அம்பேத்கர் வந்தாலும் இன்றும் அந்த பார்வை இருக்கிறது. இதை படைப்புதான் மாற்றும்" என தெரிவித்தார்.

இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி பேசிய போது, "சந்திரா என்ற பெண் இயக்குநர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அது நல்ல சென்ஸ் உள்ள கதையா இருக்கு எனத் தயாரிப்பாளர் என்னிடம் தெரிவித்தார். நான் உடனடியாக அதை கமிட் செய்யச் சொன்னேன். சந்திராவின் கதைகளை படித்துள்ளேன் என அவரிடம் குறிப்பிட்டேன்.

Kallan Movie Poster
'கள்ளன்' திரைப்படம்

பெரிய படங்களுக்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஆனால், சிறு படம் வந்தால் அதை பற்றி கருத்துகூட கூறமாட்டார்கள். எதிர்வினைதான் செய்கிறார்கள். பெரிய படங்களில் எதுவும் பார்ப்பது இல்லை. சிறு படங்கள் என்று வந்தால் கறாராக தராசு வைத்து பார்கிறார்கள்.

கரு. பழனியப்பன் வந்திருக்க வேண்டும்

இந்த படத்தின் கதாநாயகன் கரு.பழனியப்பன் விழாவிற்கு வந்திருக்கலாம். இயக்குநர் உடன் முரண்பாடுகள், பிரச்சனை இருந்தாலும் வந்திருக்க வேண்டும். படம் தொடங்கும் போது அவர் கட்சியில் இல்லை. இப்போது பெரிய கட்சியில் இருக்கிறார். உதயநிதி வேண்டாம், மேயரை கூப்பிட்டிருக்கிலாம். அப்போது கரு.பழனியப்பன் வந்திருப்பார். அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. கரு.பழனியப்பன் இந்த படத்திற்கு முன்னாடி நின்று இயக்குநரை தூக்கியிருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

அதைத்தொடர்ந்து பேசிய அவர், "வலிமை, பீஸ்ட் வெற்றிபெறும். ஏனென்றால், மிகப்பெரிய கதாநாயகன், ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால், கள்ளன் வெற்றி பெறுவதில்தான் நாகரிகம் இருக்கும் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.

ப்ளூ சட்டை மாறன் மீது தாக்கு

இறுதியாக நடிகர் ஆரி மேடையில் பேசிய போது, "நான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும். ஆனால் அப்போதைய சூழலில் நடிக்க முடியவில்லை. அதற்கு இப்போது வருத்தப்படுகிறேன். எல்லோரும் போன்று கரு.பழனியப்பன் நிகழ்ச்சிக்கு வராதது வருத்தம் தருகிறது. எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

இந்த நிகழ்ச்சி மேடையை பயன்படுத்தி தெரிவிக்க விரும்புவது ஆன்லைன் டிக்கெட் விற்பனை வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும். இதை புதிய அரசுகு கோரிக்கையாக வைப்போம். தமிழ் சினிமா சுய பரிசோதனை செய்ய வேண்டும். எழுத்தாளர்களை கொண்டாட வேண்டிய நேரம் இது.

கள்ளன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி
கள்ளன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி

மேலும், படம் நல்லா இருக்கு, இல்லை என்பது வேறு. தரம் தாழ்ந்து தாக்குதலும், விமர்சனங்களும் செய்வது கண்டனத்துக்கு உரியது. வலிமை படத்தில் கதாநாயகன் டான்ஸ் ஆடுவது நல்லா இருக்கு, நல்லா இல்லை என்று விமர்சிக்கலாம். ஆனால், ப்ரோட்டா மாவு போடுகிற மாறி இருக்கு என்றால் என்ன? அர்த்தம். அது தப்பு. நான் ப்ளூ சட்டை மாறனைதான் சொல்கிறேன். தரம் தாழ்ந்து பேச வேண்டாம்.

அஜித் சார் தனது உழைப்பால் உயர்ந்து உச்சத்தில் இருக்கிறார். எந்த பின்னணியும் இல்லாமல் வந்தவர். எங்கள் படத்தை விமர்சித்து நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள். அதை சரியாக செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்ரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மிரட்டும் மேக்கிங் கிளிம்ப்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.