பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா, தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'பிரண்ட்ஷிப்' என்று பெயரிட்டுள்ள இப்படத்தை, இயக்குநர்கள் ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.
ஜேபிஆர்பி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவித்ததுபோல் படத்தின் முக்கிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
Welcome action King @akarjunofficial Onboard. @harbhajan_singh 's #Friendship.@JPRJOHN1 #Losliya #ShamSurya @ImSaravanan_P #SeantoaStudio @CinemaassS @V4umedia_ pic.twitter.com/r7qe2bcz21
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Welcome action King @akarjunofficial Onboard. @harbhajan_singh 's #Friendship.@JPRJOHN1 #Losliya #ShamSurya @ImSaravanan_P #SeantoaStudio @CinemaassS @V4umedia_ pic.twitter.com/r7qe2bcz21
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 17, 2020Welcome action King @akarjunofficial Onboard. @harbhajan_singh 's #Friendship.@JPRJOHN1 #Losliya #ShamSurya @ImSaravanan_P #SeantoaStudio @CinemaassS @V4umedia_ pic.twitter.com/r7qe2bcz21
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 17, 2020
இதில் அர்ஜுன் இணைந்துள்ளதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் படத்தின் கூடுதல் அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இயக்குநர் ராஜ்கபூரின் 23 வயது மகன் திடீர் மரணம்!