ETV Bharat / sitara

கடத்தல் தொடர்பான காணொலிகளை நடிகரிடம் வழங்க வேண்டாம் - நடிகை கோரிக்கை - நடிகர் திலீப் கைது

கடத்தல் தொடர்பான காணொலிகளை வழங்கினால் அதை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்பு உள்ளது. இது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நடிகை கோரியுள்ளார்.

நடிகர் திலீப்
author img

By

Published : Sep 18, 2019, 1:31 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக பல்சர் சுனி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கில் மூளையாக செயல்பட்டதாகக் கூறி மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நடிகை கடத்தல் வழக்கில் தவறுதலாக சிக்கவைக்கப்பட்டுள்ளேன் எனவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியாகக் கூறப்படும் நடிகையின் காணொலி பிரதியை வழங்கினால் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கைவைத்தார் நடிகர் திலீப். ஆனால் இதனை ஏற்க மறுத்து, திலீப்பின் கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் நடிகர் திலீப். இதையடுத்து கடத்தல் தொடர்பான காணொலிகளை திலீப் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய யாருக்கும் வழங்க வேண்டாம்.

அவ்வாறு செய்தால் அதை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்பு உள்ளது. இது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதை கருத்தில்கொண்டு நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகை தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

கடத்தல் வழக்கு தொடர்பான விடியோக்களை வெளியிட வேண்டாம் - நடிகை கோரிக்கை

கடத்தல் தொடர்பான விடியோக்களை வழங்கினால் அதை திருட்டுனமான வெளியிட வாய்ப்பு உள்ளது. இது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நடிகை கோரியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.