ETV Bharat / sitara

'99 சாங்ஸ்' பட ஜோடி திறமையும் ஆர்வமும் உடையவர்கள் - ஏ.ஆர். ரஹ்மான் - ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: திறமை மிகுந்த இஹான் பட், எடில்சி வர்காஸ் ஆகியோரை '99 சாங்ஸ்' என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Rahman
Rahman
author img

By

Published : Mar 31, 2021, 9:54 PM IST

கோலிவுட்டைச் சேர்ந்த இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் புகழ்பெற்றவராகத் திகழ்ந்துவருகிறார். இவர் '99 சாங்ஸ்' என்ற இந்திப் படத்துக்கு இசையமைத்து தயாரித்திருப்பதுடன் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இப்படத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக காஷ்மீரைச் சேந்த இஹான் பட் நடிக்கிறார். சிரமப்படும் பாடகன் ஒருவன் தன்னை உணர்ந்து இசையமைப்பாளராகத் துடிக்கிறான். இப்படத்தில் 14 பாடல்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படமானது ஏப்ரல் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் முதல் தயாரிப்பான இசையுடன் இணைந்த இந்தக் காதல் கதையான 99 சாங்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. நடிகர் இஹான் பட், நடிகை எடில்சியின் திறமை, திரை ஆளுமை, ஈர்ப்பு ஆகியவை இந்தப் புதிய ஜோடியை திரையில் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களிடையே தூண்டியுள்ளது.

படம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியதாவது, "திறமை மிகுந்த இஹான் பட், எடில்சி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் திறமையோடும், ஆர்வத்தோடும் அவர்கள் திகழ்கின்றனர். அவர்களின் திரையுலகப் பயணம் வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன்" என்றார்.

தொடர்ந்து நடிகர் இஹான் பட் கூறுகையில், "படத்தின் ட்ரெய்லர் மூலம் கிடைத்த வரவேற்பு என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. எங்களது திரைப்படத்திற்கும் அதன் இசைக்கும் கிடைத்துள்ள ஆதரவும், ஊக்கமும் இதயத்தைத் தொட்டுள்ளது.

பாலிவுட்டில் எந்தப் பின்புலமும் இல்லாதவர்களுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்பை எனக்கும் நடிகை எடில்சி வர்காஸுக்கு வழங்கிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு மிக்க நன்றி" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.