ETV Bharat / sitara

96 பட இயக்குநருக்கு 'கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ்' தேசியவிருது - அஜித்

96  படம் தமிழில் பெரும் வெற்றி அடைந்தை தொடர்ந்து அப்பட இயக்குநர் பிரேம்குமாருக்கு சிறந்த அறிமுக இயக்குநராக 'கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது' வழங்கப்பட்டுள்ளது.

1
author img

By

Published : Mar 19, 2019, 11:17 PM IST

தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகமே உணர்வுப்பூர்வமான விருதுவாக கருதுவது 'கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது'. இதற்கான காரணம், 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான ‘பிரமே புஸ்தகம்’ என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிர்ஷ்டவசமாக காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார்.

ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்த படைப்பாளியின் கனவுக்கு மரியாதை செய்யும் விதமாக “கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது” என்னும் விழா 21 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்படத்தை வெற்றிகரமாக இயக்கி அதை மக்கள் மனங்களில் கொண்டாட வைத்த முதல்பட இயக்குநர்களுக்குத் தான் இந்த உணர்ச்சிகரமான விருதை வழங்குவார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளிவந்து பெரும் ஹிட் அடித்த படம் 96. இப்படத்தை புதுமுக இயக்குநர் பிரேம்குமார் இயக்கினார். தமிழில் பெற்ற பெரிய வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் பிரேம்குமார் இயக்கிவருகிறார்.

இந்நிலையில், சிறந்த அறிமுக இயக்குநருக்கான கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது பிரேம்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது குறித்து இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது, “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படியான விருதுகளாக இருந்தாலும் விருதுகள் நம்மை ஊக்கப்படுத்துபவை தான். ஆனால் இப்படியான விருதை பெற இருக்கிறோம் என்று கேள்விப்பட்டதும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். எனக்கு வாழ்த்து கூறிய பலரும் ‘கங்க்ராட்ஸ்’ என்பதோடு கடந்துவிடவில்லை.

ஒவ்வொருவரும் இதைப்பற்றி மிகவும் உணர்வுப் பூர்வமாக பேசினார்கள். விஜய்சேதுபதி திரிஷா உள்ளிட்ட பலரும் தங்களின் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள். தற்போது படத்தைத் தெலுங்கில் இயக்க இருக்கும் நிலையில் இப்படியான விருது கிடைத்திருப்பது பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது” என்றார்.

96 பட இயக்குனருக்குகொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது" 
96  படம் தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான  விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார். 

 இந்தியத் திரையுலகுமே இந்த விருதை மிகவும் உணர்வுப்பூர்வமாக கருதும் விருது

 1992-ம் ஆண்டு  'பிரமே புஸ்தகம்' என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாக காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார். ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்த படைப்பாளியின் கனவுக்கு மரியாதை செய்யும் விதமாக "கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது" என்னும் விழா 21 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்படத்தை வெற்றிகரமாக இயக்கி அதை மக்கள் மனங்களில் கொண்டாட வைத்த முதல்பட இயக்குநர்களுக்குத் தான் இந்த உணர்ச்சிகரமான விருதை வழங்குவார்கள். அந்த வகையில்  96 படத்தைத் இயக்கிய இயக்குநர் ப்ரேமிற்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வழங்க இருக்கிறார்கள்.

 இந்த விருது குறித்து இயக்குநர் ப்ரேம் பேசும்போது, 

"எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. விருதுகள் நம்மை ஊக்கப்படுத்துபவை தான். ஆனால் இப்படியான விருதை பெற இருக்கிறோம் என்று கேள்விப்பட்டதும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். தற்போது 96 படத்தைத் தெலுங்கில் இயக்க இருக்கும் நிலையில் இப்படியான விருது கிடைத்திருப்பது பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.