சென்னை: ஓடிடி தளங்கள் அதிகமான பிறகு ஆந்தாலஜி படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் கடந்த வாரம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய "நவரசா" ஆந்தாலஜி படம் வெளியானது.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளில் கடந்த வாரம் (ஆக.6) படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
ஊதியம் இல்லாமல் நடித்த நட்சத்திரங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இணைந்து தயாரித்துள்ளனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இதில் நடித்துள்ளனர்.
இதில் நடித்த நட்சத்திரங்கள் ஊதியம் பெறாமல் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளில் வெளியான நவரசா படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் முதல் 10 இடத்தில் உள்ளது. மேலும் இந்த படத்தை 40% வெளிநாட்டு இந்தியர்கள் பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஈர்த்த சூப்பர் வில்லன் சாய் சித்தார்த்..!