ETV Bharat / sitara

3 ஐயன் x சூது கவ்வும்: திரைக்குறுக்கேற்று - film ideology

இருவேறுத் திரைப்படங்களில் உள்ள ஒற்றைச் சிந்தனையை அல்லது ஒற்றைச் சிந்தனையின் அணுகுமுறைகளைப் பற்றிக் கூறுவதே ’குறுக்கேற்று’. ஆங்கிலத்தில் ‘Cross over'என்று கூறுவர், இரு வேறு வகையான இசையை ஒன்று சேர்ப்பது, இரு வேறு வகையான கலையை ஒன்று சேர்த்து அணுகுவது குறுக்கேற்றின் கூற்று. அதில் இரு வேறு திரைப்படங்களில் அணுகப்பட்டிருக்கும் ஒற்றைச் சிந்தனையைக் கீழே காண்போம்.

3 ஐயன் x சூது கவ்வும் : திரைக்குறுக்கேற்று

author img

By

Published : Jan 4, 2022, 10:30 PM IST

மனிதனின் உணர்வுகள் என்றும் விளக்க இயலாத முரண். அதற்கென அளவுகோல் இல்லை, வரைமுறை இல்லை. அவனின் உணர்வுகள் என்றும் சமநிலையாக இருந்தது இல்லை. ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும் தனித் தனிப் பார்வைகளைக் கொண்டது.

அப்படி இருக்கையில், அனைவரின் உணர்ச்சிகளையும், அதை வெளிப்படுத்தும் வகைமுறைகளையும் ஒரே உலக கோட்பாட்டுக்குள் வைப்பது எப்படி நியாயமாகும். ஒரே நியாய தர்மங்களை அனைவரின் உணர்ச்சிக்கும் பொருத்திப் பார்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

இதற்கான விவாதங்கள் பல உளவியல் வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் எழுந்த வண்ணம்தான் உள்ளது. இவ்வுலகினுள் இருக்கும் பல மனங்களுக்குள்ளும் பல்வேறு உலகங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

3 ஐயன் (3 Iron)

'It is hard to tell the world we live in is either a reality or a dream!' (நாம் வாழ்கின்ற வாழ்வு கனவா அல்லது நிஜமா என்று கூறுவது அவ்வளவு எளிதானதல்ல) இந்த வரிகளுடன்தான் கிம் கி டுக் இன் ‘3 ஐயன் (3 Iron)’ திரைப்படம் நிறைவடையும். கிம் கி டுக் இன் திரைப்படைப்புகளில் மிக முக்கிய மாஸ்டர் பீஸாக இத்திரைப்படத்தைச் சொல்லலாம்.

கிம், தனது வழக்கமான திரைமொழியில், காதல் உறவை மீண்டும் அழுத்தமாக வித்தியாசப் பார்வையில் பதிவுசெய்திருப்பார். இந்தத் திரைப்படத்தில் வரும் காதலர்கள் தங்களுக்குள் காதல் வசனங்கள் ஏதும் பேசிக்கொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இதில் அவர்கள் இருவருக்கும் வசனங்களே கிடையாது.

வழக்கமாக இப்படிப்பட்ட அணுகுமுறையைத் தனது பல திரைப்படத்தில் கிம் பயன்படுத்திருப்பார். அளவில்லா உணர்வுப் பரிமாற்றத்திற்கு நடுவே, அர்த்தமற்ற வசனங்கள் எதுவும் வேண்டியதில்லை என்று கிம் நினைத்திருக்கலாம்.

ஒரு கணவனால் பாதிக்கப்பட்ட மனைவியின் உணர்வும், உளவியலும், காதலும்தான் இத்திரைப்படம். இவள் தன் காதல் நிஜமா அல்லது கனவா? அது இவ்வுலகத்தால் கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள் அடங்குமா? என்றெல்லாம் யோசிக்கவில்லை.

அவளுக்கு வேண்டியதும், வெளிப்படுத்த நினைப்பதும் அளவற்ற காதலை மட்டுமே. அவளின் காதலன் நிஜமா அல்லது இவளின் கற்பனையா என்று அவள் ஆராய முனையவில்லை, ஏனென்றால் அந்தக் காதலில் அவள் எந்தப் பதில் ஆதாயமும் தேடவில்லை.

2004இல் வெளியான இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழா உள்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. பல்வேறு விமர்சகர்களால் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. பலரும் இத்திரைப்படத்திற்குத் தங்களின் விளக்கத்தை, தங்களின் பார்வையை இன்றளவும் பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு கலை பல்வேறு பார்வையில் பல்வேறு கோணங்களில் மாறுவதுதானே அதனின் தனிச் சிறப்பு? இவரின் வசனங்கள் பெரிதும் இல்லா இத்திரைப்படத்தின் திரைமொழி உணர்த்தும் உணர்வுகளும், தாக்கமும் 1000 பக்க வசனங்களின் தாக்கத்தைத் தாண்டியது.

சூது கவ்வும்

2013இல் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் ’சூது கவ்வும்’. 2010-க்குப் பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமான பல குறும்பட இயக்குநர்களின் வருகை, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அலை (New wave) என்றே கூறலாம். அதில் மிக முக்கியமான ஒரு இயக்குநர், ‘நலன் குமாரசாமி’. இவரின் இயக்கமும் திரைமொழியும் அவ்வளவு நேர்த்தியாகவும் புதிதாகவும் இருக்கும்.

இவரின் முதல் படமான சூது கவ்வும் ஒரு டார்க் காமெடி (Dark Comedy) படம். தமிழ் சினிமாவில் மிகவும் தொடாட ஒரு வகையான களம். இன்றுவரை அந்த வகையான திரைப்படங்களுக்கு ஒரு சரியான முன்மாதிரியாக ’சூது கவ்வும்’ திகழ்கிறது.

ஒரு கடத்தல்கார கூட்டத்தின் நகைச்சுவையான கடத்தல் முறைகளையும், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மிக நகைச்சுவைத் தன்மையுடன் கூறியிருப்பார் இயக்குநர்.

இப்படத்தின் சிறப்பம்சங்கள் எனத் திரைக்கதை, காட்சி அமைப்பு, நடிகர்கள் எனப் பல விஷயங்கள் இருப்பினும் இதில் நாம் பார்க்கப்போவது கதையின் நாயகனான ’தாஸ்’ கதாபாத்திர அமைப்பையும் அவனின் கற்பனைக் காதலியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘ஷாலு’ கதாபாத்திரத்தைப் பற்றியும்தான்.

’தாஸ்’ ஒரு காமெடி கடத்தல்காரன். இவனுக்கென்று தனி விதிமுறைகளையும், நியாயங்களையும் வகுத்துக்கொள்பவன். இவனின் கற்பனைக் காதலிதான் ‘ஷாலு’. இது இவனுக்கு இருக்கும் ஒரு மனநோய். அது அவனுக்குத் தெரியாமல் இல்லை. அவன் அதை விரும்பியே ஏற்றிருக்கிறான்.

உலகிற்கு மனநோயாகத் திகழும் ஷாலு, தாஸுக்கு மகிழ்ச்சித் தருகிறாள். மகிழ்ச்சித் தருவது எப்படி அவனுக்கு நோயாகும்? இங்கு மனித உணர்ச்சிகளுக்கு உலக கோட்பாடுகள் எதுவும் பொருந்தாது; அது இயற்கைக்கு நிகரானது. அதைப் புரிந்துகொள்ள முடியாது, ஏற்றுக்கொள்ள மட்டுமே முடியும்.

குறுக்கேற்றுக் கூறு

'3 அயன் (3 Iron)' படத்தில் கிம் கி டுக் மிக அழுத்தமாகக் கையாண்ட ஒரு விஷயத்தை 'சூது கவ்வும்' திரைப்படத்தில் நலன் குமாரசாமி நகைச்சுவையாகக் கையாண்டிருப்பார். இப்படி ஒரு சிந்தனையை எதிர்கோண பாணியிலும் சொல்ல முடிவது திரைக் கலையின் தனிச்சிறப்பே!

இதையும் படிங்க: விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.