தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை,அது பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில்,ஆட்சியில்,முக்கிய பங்கு வகுத்திருக்கிறது என்பதே நிதர்சனம்.
அப்படி இருப்பது ஆரோக்கியமானதா இல்லையா என்ற வாதம் ஒரு பக்கம் இருப்பினும், கலநிலவரம் இதையே குறிக்கிறது.அந்த வகையில் தமிழ் திரையுலகின் ஒரு தவிர்க்க முடியாத நடிகர்,விஜய் என்று சொன்னால் அது மிகை ஆகாது.சினிமா வர்த்தகத்தில் நடிகர் விஜய் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் என்று கூறுவதில் எந்த ஐயமும் இல்லை.
இந்த பாதை, அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை.உருவக்கேலிகள் ,அவமானங்கள்,தோல்விகளைத் தாண்டி தான் வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த கதை தான். அவர் 29ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த இந்நாளில் சமூக வலை தளங்களில் அவரின் ரசிகர்கள், #29YearsOfVijayism என்ற ‘hashtag' இல் Trend செய்து வருகின்றனர். அதை மீண்டும் கூறுவதில் புதிய பயன் இல்லை ,அதனால் அவரை வேறு கோணத்தில் ரசித்த ரசிகனாய்,என் ஆஸ்தான நாயகனுக்கு எழுதும் கடிதமாக இந்த உரையை தொடர்கிறேன்.
அன்புள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு,
சிறுவயதில் என் ஆஸ்தான நாயகனாக அறிமுகமான நீங்கள் , எல்லா காலகட்டத்திலும் ,திரைப்படம், வெற்றி,தோல்வி இவை அனைத்தையும் தாண்டி தனி மனித,நடிகர் விஜயாக ஏதாவது ஒரு விதத்தில் என்னை ரசிக்கவே வைத்திருக்கிறீர்கள். என் தனிமனித பரிணாம வளர்ச்சியில் ,சினிமா மீதான தேடலும்,உலக சினிமாவின் தாக்கமும் என் ரசனையை,பிற்காலத்தில் நிறையவே மாற்றியது.ஆனால்,உங்கள் திரைப்படத்தின் மேலான கருத்து வேறுபாடு தாண்டி ,உங்கள் மீது உள்ள ரசனை மாறாதவாரே இருக்கிறது.
ஒரு ’commercial hero' வாக நீங்கள் எட்டிய வெற்றி மிக உயரமாகது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால்,எனக்கு மட்டுமே தெரிந்த அல்லது நான் ரசித்த நடிகர் விஜய்யை இனி அதிகமாக திரையில் காண விரும்புகிறேன்.’தப்பு தாளங்கள்’,’முல்லும் மலரும்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களை நடித்த மாபெரும் நடிகன் ‘ரஜினி காந்த்’ஐ வெறும் மசாலா நடிகனாக மாற்றியது ரசிகர்களின் தவறா அல்லது சினிமா வர்த்தக அமைப்பின் தவறா என்ற வாதத்தை தவிர்த்து,அது காலத்தின் விபத்து என்பதே நிதர்சனம்.
நீங்கள் காலவிபத்துகளுக்கு ஆளாகாது இருப்பதையே வேண்டுகிறேன்.உங்களினுள் ஒரு எதார்த்த நடிகன் இருக்கிறான் என்று எப்போதும் நண்பர்களிடம் வாதிப்பேன்.அது ஒரு சில இடங்களில் நன்றாக தெரிந்திருக்கும்,’துள்ளாத மனமும் துள்ளும் ’ போன்ற திரைபடங்களில் ,’காவலன்’ படத்தில் வரும் ‘park scene' போன்ற இடங்களில் அது தெரியவரும் .ஆனால் இனி வரும் காலங்களில் அப்படி ஒரு விஜய்யை பார்க்கவே ஆர்வமாக உள்ளேன். மற்றும், உங்கள் கலைபயணம் மென்மேலும் சிறப்பாவதில் மகிழ்ச்சி.
உங்கள் ரசிகர்களில் ஒருவன்