2007ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ‘Chak De India’. ஷிமித் அமின் இயக்கிய இப்படம் ஷாருக்கான் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக மாறியது. ரொமான்டிக் ஹீரோ என்ற பிம்பத்தை கொண்டிருந்த ஷாருக்கான், சாதிக்கத் துடிக்கும் ஹாக்கி பயிற்சியாளராக இதில் நடித்திருப்பார்.
![14 Years Of Epic Chak De India](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12730698_2.jpg)
ஷாருக்கானா இது என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு, கபீர்கான் எனும் ஹாக்கி பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் நடித்திருப்பார். பெண்கள் ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியபோது பலரும் இந்தப் படத்தை உதாரணம் காட்டி பேசியிருந்தார்கள்.
இந்தப் படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 14 YearsOfEpicChakDeIndia என்ற ஹேஷ்டேக்கில் இதை ஷாருக்கான் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். Chak De India திரைப்படம் பல ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. ஷாருக்கான் நடிப்பில் பார்க்க வேண்டிய 10 படங்களை பட்டியலிட்டால், அதில் Chak De India இல்லாமல் இருக்காது.
இதையும் படிங்க: வலிமை: யூடியூப் மியூசிக்கில் இன்னும் முதலிடம்!