ETV Bharat / sitara

”என் குரல் பல நூறு மில்லியன் மக்களிடமிருந்து எதிரொலிக்கும்” - வாரிசு அரசியலை சாடி கங்கனா அதிரடி ட்வீட் - வாரிசு அரசியலை சாடி கங்கனா ட்வீட்

தனது மும்பை அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், தனது மராத்தி நண்பர்கள் தனக்கு பெரும் ஆதரவு அளித்ததாகவும், ஆனால் ஆடம்பரப் பெண்ணியவாதிகளும் பாலிவுட் சமூக ஆர்வலர்களும் தனக்காக குரல் எழுப்பவில்லை என்றும் கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
author img

By

Published : Sep 10, 2020, 7:55 PM IST

மும்பையிலுள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவில் உள்ள 'மணிகர்னிகா பிலிம்ஸ்' அலுவலகப் பகுதி விதிகளை மீறி கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக இரண்டு முறை நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மும்பை மாநகராட்சி கங்கனாவின் அலுவலகத்தை இடித்தது. இது ஜனநாயக மீறல் என கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மும்பை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடிக்க மும்பை மாநகராட்சி ஆணையத்திற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிக அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, “மும்பை நகர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளது” என கங்கனா கூற, அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவை அவமதித்த கங்கனாவை மும்பைக்குள் வரக்கூடாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சூளுரைத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கங்கனாவின் அலுவலகம் இடிக்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து ட்வீட் செய்துள்ள கங்கனா, "உங்கள் தந்தையின் நற்செயல்கள் உங்களுக்கு செல்வத்தைத் தரலாம். ஆனால் மரியாதையை நீங்கள்தான் சம்பாதிக்க வேண்டும். எனது வாயை நீங்கள் மூடலாம். ஆனால் அனைவரது குரல்களையும் நீங்கள் நசுக்க முடியாது. எனக்குப் பின் நூறு மில்லியன் மக்களிடம் என் குரல் எதிரொலிக்கும். உண்மையை உங்களால் எத்தனை நாள்களுக்கு மறைக்க முடியும். நீங்கள் செய்வது வாரிசு அரசியலைத் தவிர வேறொன்றுமல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டதற்குப் பிறகு தன்னுடைய பல மராத்தி நண்பர்கள் தனக்கு ஆதரவு அளித்ததாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். முன்னதாக தான் மும்பை குறித்து தெரிவித்த கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள கங்கனா, மகாராஷ்டிரா அரசின் இத்தகைய செயல்கள் அம்மாநிலத்தின் பாரம்பரியத்துக்கும் பெருமைக்கும் களங்கம் கற்பிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

சில ஆடம்பரப் பெண்ணியவாதிகளும், பாலிவுட் சமூக ஆர்வலர்களும் தனது அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டபோது தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் கங்கனா சாடியுள்ளார்.

இதையும் படிங்க : “அதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும்”- ராவத் அடித்த அந்தர் பல்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.