ETV Bharat / sitara

டாப்ஸியைத் தொடர்ந்து ரியாவுக்கு ஆதரவு தெரிவித்த வித்யா பாலன் - டாப்ஸி பண்ணு

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை லட்சுமி மஞ்சு தெரிவித்த கருத்துக்கு நடிகை வித்யா பாலன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

வித்யா பாலன்
வித்யா பாலன்
author img

By

Published : Sep 2, 2020, 6:12 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு சுஷாந்தின் காதலி ரியாவும் அவரது குடும்பத்தினருமே காரணமெனக் கூறி சுஷாந்தின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது.

இதனையடுத்து சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், சுஷாந்தின் மரணத்திற்கு ரியாவும் அவரது குடும்பத்தினருமே காரணம் என சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் அவரை குற்றவாளியாக சித்தரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரியாவுக்கு ஆதரவாக நடிகை லட்சுமி மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றைப் பதிவிட்டார். இவரின் கருத்துக்கு நடிகை டாப்ஸி பன்னு ஆதரவு தெரிவித்திருந்தார்.

தற்போது இவரைத் தொடர்ந்து வித்யா பாலன் லட்சுமி மஞ்சுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வித்யா பாலன் கூறியிருப்பதாவது, 'லட்சுமி மஞ்சு, இதை உரக்கச் சொன்னதற்கு கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அன்பார்ந்த இளம் நட்சத்திரம் சுஷாந்த் சிங்கின் திடீர் மரணம் ஊடகங்களில் கேலிக்கூத்தாகியுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.ஒரு பெண்ணாக ரியாவைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று தானே சொல்வார்கள். அல்லது குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி என மாறிவிட்டதா? ஒரு குடிமகனுக்கு அரசியலமைப்பு தரும் உரிமைகளை மதிப்போம். சட்டம் அதன் கடமையை செய்யவிடுவோம்' எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.