'மிஸ் டிவா யுனிவெர்ஸ் 2015' பட்டம் பெற்று, 'மிஸ் யுனிவெர்ஸ்' போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இதன் பின் பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார்.
தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ஊர்வசி ரவுத்தேலா, ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் நடத்திய ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார். இது குறித்து ஊர்வசி கூறுகையில், நடிகை நடாலி போர்ட்மேனிடமிருந்து நடிப்பு குறித்த சந்தேகங்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து கற்றுக்கொண்டு-வருகிறேன்.
நடாலி போர்ட்மேன் ஆஸ்கர் விருது வென்ற நடிகை. அவர் எனக்கு மிகவும் பிடித்த 'Black Swan and Jackie' படத்தில் ஒரு பகுதி நடித்துள்ளார். நடாலி தனது 25 ஆண்டுகால தொழில் வாழ்க்கையில் அவர் கற்றுக்கொண்ட அனைத்து அனுபவங்களையும் இந்த வகுப்பில் கற்றுக்கொடுக்கிறார்.
நடாலிக்கு நடிப்பு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ஒரு கதாபாத்திரத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, அதற்காக எப்படி உழைப்பது என்பது உள்ளிட்ட நடிப்புக்கான அனைத்து நுணுக்கங்களையும் பகிர்ந்துள்ளார்.
இயக்குநருடன் எவ்வாறு பணியாற்றுவது, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எவ்வாறு உயிரோட்டம் கொடுப்பது உள்ளிட்டவைகளைக் கற்று கொடுப்பதாகக் கூறினார்.