ETV Bharat / sitara

வீட்டுக்குள் ஃபுட்பால் ஆட்டம்! மொட்டை மாடியில் உடற்பயிற்சி - ரசிகர்களை குஷிப்படுத்திய டைகர் - தனிமைப்படுத்தலில் டைகர் ஷெராஃப்

மும்பை: ஊரடங்கு உத்தரவுக்கு இடையே காணாமல் போயிருந்த நடிகர் டைகர் ஷெராஃப், தனது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Tiger Shroff plays football in the drawing room to stay active
Bollywood Actor Tiger Shroff
author img

By

Published : Mar 30, 2020, 8:59 PM IST

ஊரடங்கு காரணமாக ஜிம்முக்கு போக முடியாத நிலையில், தனது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக்கியுள்ளார் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்.

ஓவியம் வரையும் அறையில் ஃபுட்பால் ஆடுவது, மொட்டை மாடியை ஜிம்மாக மாற்றி உடற்பயிற்சி செய்வது என தனது வீட்டை உடற்பயிற்சி கூடமாக்கி அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்.

இதில், "சிறுவனாக இருந்தபோது வீட்டில் வைத்து விளையாடுவதற்கு எனது தாய் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு வேறு எதுவும் வாய்ப்பு இல்லை" என்று வீட்டினுள் கால்பந்து விளையாடுவதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், "தற்போது எல்லாரும் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை #StaySafeStayStrong" ஹேஷ்டேக்கில் பதிவிடவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் பல வித்தியாசமான பதிவுகளை குவித்து வருகின்றனர்.

கடந்த இருநாட்களுக்கு முன் தனது கட்டுமஸ்தான உடற்கட்டுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டிருந்த அவர், "ஏக் தா டைகர் மீண்டும் தனது உடலை ஷேப் செய்ய களமிறங்குகிறது" என்று குறிப்பட்டிருந்தார்.

இதையடுத்து சில நாட்கள் காணாமல் போயிருந்த டைகர் ஷெராஃப் மீண்டும் திரும்பிவிட்டதாக ரசிகர்கள் குஷியுடன் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கினர்.

இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒர்க்அவுட் மோடுக்கு இறங்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.