மும்பை : 1989-90களில் ஜம்மு காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து எடுக்கப்பட்ட படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்தப் படம் வெறுப்பை உமிழ்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் : இதற்கிடையில் படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என சில எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியான மார்ச் 11ஆம் தேதி முதல் தற்போதுவரை மிகப்பெரிய அளவிலான வசூல் வெற்றியை குவித்துவருகிறது.
முதல் நாளிலே ரூ.3.55 கோடி வசூலித்த தி காஷ்மீர் ஃபைல்ஸ், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைக்குள் ரூ.167.45 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. இந்த நிலையில் அடுத்த தினங்களில் முறையே ரூ.12.40 (திங்கள்கிழமை), செவ்வாய்க்கிழமை ரூ.10.25 கோடி, புதன்கிழமை (மார்ச் 23) ரூ.10.03 கோடி என இதுவரை ரூ.200 கோடி வசூலித்துள்ளது.
வரி விலக்கு : தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் மூத்த நட்சத்திரம் அனுபம் கெர், பல்லவி ஜோஷி, மிதுன் சக்கரபோர்த்தி, தர்ஷன் குமார், புனீத் இஸ்ஸார், மிரினால் குல்கர்னி உள்ளிட்ட பல்வேறு திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்தப் படத்துக்கு உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.
மேலும் மத்திய அரசும் படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்பை தூண்டுகிறது- ஜெய்ராம் ரமேஷ்!