ETV Bharat / sitara

சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்திய 'தி எம்பயர்'

முகலாய அரசர் பாபரை புகழ் பாடுவதாகக் கூறி 'தி எம்பயர்' இணையத்தொடருக்கு தடைவிதிக்க கோரி சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Empire
Empire
author img

By

Published : Aug 28, 2021, 3:12 PM IST

பாலிவுட் முன்னணி இயக்குநர்களின் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குநராக இருந்த மிதாக்ஷரா குமாரின் இயக்கத்தில், உருவான வெப் சீரிஸ் 'தி எம்பயர்' (The Empire).

இந்தத் தொடரில், ஷபனா ஆஸ்மி, குணால் கபூர், டினோ மோரியா, த்ரஷ்டி டாமி, ஆதித்யா சீல், சாஹர் பம்பா, ராகுல் தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மோனிஷா அத்வானி, மது போஜ்வானி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில், நேற்று (ஆக.28) வெளியானது. இந்தத் தொடரில் இந்தியாவின் மீது படையெடுத்து வரும் பாபரை புகழ் பாடும் விதமாக இருப்பதாக கூறி இந்த தொடரை ஒளிப்பரப்பு செய்ய தடைவிதிக்க வேண்டுமென பலர் புகார் எழுப்பினர்.

இந்தப் புகார்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இதனையடுத்து #UninstallHotStar என்னும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து சமூகவலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'தி எம்பயர்' தொடர் அலெக்ஸ் ரூதர்ஃபோர்ட் எழுதிய 'எம்பயர் ஆஃப் தி மொகல்' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்தத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்தியாவில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

'83', 'எக்தா டைகர்', 'டயூப்லைட்' உள்ளிட்ட பல வெற்றிபடங்களை இயக்கிய கபீர் கான் சமீபத்தில், இந்தி சினிமாவில் முகலாயர்களின் சித்தரிப்பு குறித்து பேசியது சமூகவலைதளங்களில் வைரலானது.

அதில் அவர் கூறியதாவது, நடந்த சம்பவத்தை உள்ளபடியே கூறினால் அது பிரச்சனையாகிவிடுகிறது. இது என்னை மிகவும் வருந்தப்படவைக்கிறது. ஒரு திரைப்படத்தை எடுக்கும் முன்பு திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் பல ஆராய்சிகளில் ஈடுபடுவர். அதில் அதன் உண்மை தன்மை புரிந்து விடும்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இங்கு பலருக்கு வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கலாம். அதில் தவறு இல்லை. திரையில் முகலாயர்களை வில்லனாக காட்ட விரும்பினால் தயவு செய்து சில ஆராய்சிகள் செய்து ஏன் அவ்வாறு காட்ட முயற்சிக்கிறீர்கள் என எனக்கு புரியவைக்கவும்” என்றார். இவரின் இந்தப் பேச்சு சமூகவலைதளத்தில் நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இந்தத் தொடரால் சமூகவலைதளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எனது களம் நகைச்சுவை தான் - 'சார்பட்டா' தங்கதுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.