ETV Bharat / sitara

பாலிவுட் திரையுலகம் ஈகோக்கள் நிறைந்த இடம் - சுஷ்மிதா சென்

author img

By

Published : Jul 14, 2020, 10:18 PM IST

மும்பை: பாலிவுட் திரையுலகம் ஈகோக்கள் நிறைந்த இடமாகும் என சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென்

பாலிவுட், பிராந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா சென் முதல் முறையாக ஆர்யா என்ற வெப்சீரிஸ் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து சமீபத்தில் சுஷ்மிதா சென் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இது போன்றதொரு கதாபாத்திரத்தில் நடிக்க பத்து ஆண்டுகள் வரை எதிர்நோக்கி காத்திருந்தேன்.

இக்கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது வாழ்நாளில் சிறந்த கதாபாத்திரமாக ஆர்யா இருக்கும். இந்தி திரையுலகம் பெருகிய ஈகோக்கள் நிறைந்த இடமாகும். ஒருவர் சலுகையை நிராகரிக்கும்போது, அது ஒரு பிரச்சனையாகவே காணப்படுகிறது.

நாங்கள் மிகுந்த ஈகோக்கள் கொண்ட வியாபாரத்தின் பிடியில் இருக்கிறோம். அது ஒரு ரகசியம் அல்ல. ஒவ்வொரு முறையும் நீங்கள் வேண்டாம் என்று சொன்னால், அது ஒரு பிரச்சினை. நீங்கள் ஒரு பிரச்சினை.

நேர்மையாகவும், பொறுப்பாகவும் இருப்பது எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது.
சமூக ஊடகங்களில் ஒற்றுமையை பற்றி விவாதம் செய்வது உதவாது. மாற்றத்தைக் கொண்டுவருவது அனைவருக்கும் சமமான பொறுப்பு.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், ஒரு நபர் மட்டும் நினைத்தால் போதாது. நாம் அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.