மும்பை: ஆணாதிக்கத்துக்கு எதிராக போராட வேண்டும் என சுஷாந்தின் தோழி ரியாவுக்கு ஆதரவாக பாலிவுட்டில் குரலெழும்பி வரும் வேளையில், சுஷாந்த் சிங்கின் உதவியாளருடனான வாட்ஸ்அப் சாட்களை இயக்குநர் அனுராக் கஷ்யப் வெளியிட்டுள்ளார்.
சுஷாந்த் இறப்பதற்கு மூன்று வாரத்துக்கு முந்தைய சாட்கள் அவை. அதில், சுஷாந்த் ஏன் தன்னுடன் பணிபுரிய விரும்பவில்லை என அனுராக் கேட்டிருக்கிறார். மே 22ஆம் தேதி அனுராக் கஷ்யப்புக்கு சுஷாந்தின் உதவியாளர் மெசேஜ் செய்துள்ளார். அதில், உங்கள் படத்தில் சுஷாந்துக்கு வாய்ப்பு இருந்தால் வழங்க வேண்டும். ஒரு ரசிகனாக சொல்கிறேன், நீங்களும் சுஷாந்தும் திரையில் நிகழ்த்தும் அதிசயத்தை காண விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அனுராக், சுஷாந்த் ஒரு புதிரான ஆள். அவர் திரைப்பயணத்தை தொடங்கும் முன்பே அவரை எனக்கு தெரியும். அவரது முதல் படமான ‘கை போ சே’ வாய்ப்புக்கு நான் காரணம். அவருக்காக ஒரு படத்தை தூக்கி எறிந்துவிட்டு வந்தவன் நான் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இந்த சூழலில் ரியாவுக்கு ஆதரவாக நாம் ஒன்று சேர வேண்டும். இதில் மையப்புள்ளியாக சுஷாந்த் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.